பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

model-bas

கள், கட்டளைகளைக் கோப்புகள் மற்றும் விரி தாள்கள் போன்ற வடி வங்களில் இத்தகைய மாதிரிகள் சேமிக்கப்படுகின்றன.

model-based expert system மாதிரி-சார்ந்த வல்லுநர் அமைப்பு: ஒரு பொருளின் வடிவமைப்பு மற்றும் பணி பற்றிய அடிப்படை அறிவு சார்ந்த வல்லுநர் அமைப்பு. சான்றாக இத்தகைய அமைப்புகள் கருவியின் சிக்கல்களைக் கண்டறி யப் பயன்படுத்தப்படுகின்றன. Rule based expert system 67Girl 15681 எதிர்ச் சொல். model geometric : 6ulq6, 8,6Idflg, உருப்படிவம் : ஒரு கணினி வரை கலைப் பொறியமை வில் வடி வமைக்கப்பட்டு தகவல் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஓர் உருவத்தை, ஒரு பகுதியை அல்லது புவி வரைகலைப் பரப்பை, முழுமையான முப்பரிமாண அல்லது இருபரிமாணப் புவியியல் வடிவ கணித அமைப்பில் உருவாக்கிக் காட்டுதல். modeling : உருப்படிவாக்கம்: ஒரு பொறியமைவின் சில பகுதிகளைத் துல்லியமாக உருப்படுத்திக் காட்டும் செய்முறை. modem : மோடம் (அதிர்விணக்க Éääl): Modulator - Demodulator arsip இரண்டு சொற்களின் முதலெழுத்து களைச் சேர்த்து இச்சொல் உருவாக் கப்பட்டது. குரல்-நிலை தகவல் தொடர்பு வசதிகளின் சமிக்ஞை களை ஏற்றும், மாற்றியும் அனுப்பிப் பெறுகின்ற சாதனம். தொலைபேசிக் கம்பி இணைப்புக்கு கணினி யையோ அல்லது முனையத்தையோ ஆற்றுப்படுத்துகின்ற சாதனம். பெறும் இடத்தில் கணினியில்

455

modem

இலக்க முறை துடிப்புகளை ஒலி அலை வரிசைகளாகவும் அவற்றை மீண்டும் துடிப்புகளாகவும் மாற்றித் தருகிறது. கணினியின் உள்ளேயும் மோடெத்தைப் பொறுத்து முடியும். வெளிப்பகுதியில் மோடெத்தை வைத்தால் 'போர்ட்' மூலம் அது கணினியில் சேர்கிறது. தொலை பேசியில் அழைப்பது, பதில் சொல் வது ஆகியவற்றை மோடெம்

கையாள்கிறது. இவற்றை அனுப்பும்

வேகம் ஒரு நொடிக்கு 300 முதல் 33,600 துண்மிகள் அல் லது அதற்கு மேற்பட்டதாகும். தொலைபேசி மூலம் அழைக்கும் மோடெத்தின் சராசரி வேகம் ஒரு நொடிக்கு 2,400 துண்மிகள். 33,600 துண்மிகள் திற னுள்ளது பிரபலமாகிறது. ஒரு நொடிக்கு 2,400 துண்மிகள் என்ற வேகத்தில் இயங்கும்போது 7 நொடி களில் 2,000 எழுத்துகளைக் கொண்ட ஒரு திரையை நிரப்பும். எழுத்து விகிதமானது துண்மி விகிதத்தில் 10%. ஆகவே, 2,400 துண்மிகள் ஒரு நொடிக்கு என்பது 240 எழுத்துகள் ஒரு நொடிக்கு என்பதாகும். மோடெத்தில் பார்க்க வேண்டியது அதிவேகம், பிழை சோதித்தல் மற்றும் தகவல்களைச் சுருக்கல் ஆகியவையே. புதிய மோடெம்கள் தானாகவே பிற மோடெம்களின் வேகத்திற்கும், வன்பொருளின் விதி முறைகளுக்கும் சரி செய்து கொள் கிறது.

modem eliminator : (Blom.0Ltd விலக்கி: நெருக்கமாக உள்ள இரண்டு கணினிகள் மோடெம் இல்லா மலேயே தொடர்பு கொள்ள அனு மதிக்கும் சாதனம். தனிநபர் கணினி

களுக்கு, இது தேவையான மென் பாருளைக் கொண்ட முழு மோடெம் போன்றதாகும். ஒத்

திசைவு (சின்க்ரனஸ்) அமைப்பு