பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

absolute mov 44 access


absolute movement : நிரந்தரப் பெயர்ச்சி : தனி நுகர்வு திரையில் உள்ள ஒரு வடிவை ஒரு குறிப்பிட்ட எக்ஸ் - ஒய் ஒருங்கிணை அச்சுகளின் படி ஒரு புதிய இடத்துக்கு மாற்றுதல். இது சார்நிலைப் பெயர்ச்சியிலிருந்து மாறு பட்டது.

absolute value : நேர் அளவு : கூட்டல் அல்லது கழித்தல் குறியீடு இல்லாத எண் அளவு.

absolute vector : நேர் அளவுச்சரம் : கணினி வரைகலை முறையில் நேர் ஒருங்கிணைப்புகளுடன் வடிவமைக் கப்பட்ட ஒரு அளவுச் சரம்.

abstract : சுருக்கம்; பொழிப்பு : ஒரு ஆவணத்தினைப் பற்றிய சுருக்கமான விளக்கம்.

AC : ஏசி : மாற்று மின்விசையைக் குறிக்கும் Alternating Current என்பதன் குறும் பெயர். இவ்வகை மின் சாரமே இல்லம், பள்ளிகள், வணிக அமைப்புகளில் பயன்படுத்தப்படு கிறது.

ACC : ஏசிசி : ஆஸ்திரேலிய கணினி மாநாடு என்பதைக் குறிக்கும் Austra lian Computer Conference என்பதன் குறும்பெயர். ஆஸ்திரேலிய கணினிச் சங்கத்தின் ஆண்டு மாநாடு.

accelerator: முடுக்கி: வேகப்படுத்தி: ஒரு பணியை விரைவுபடுத்தும் முக்கிய இணைப்பு.

acceptance test : ஏற்புச் சோதனை : புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை.கணினி முறைமை செயலொழுங்கு நிலை யில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும் பாலும் இச்சோதனை நிகழ்த்தப்படு கிறது.

access : அணுகல் : விரும்பும் தக வலைக் கண்டறிய பொதுவாக தகவல்களைப் பெறுதல்.

access arm : அணுகு கை; பெறு நிலைக் கரம் : காந்த வட்டுக் கோப்பு சேமிப்பு அலகில் படித்தல் மற்றும் எழுதுதலுக்கான பொறியமைவை குறிப்பிட்ட நிலையால் பொருத்த உதவும் எந்திர உறுப்பு.

access code : அணுகுக்குறியீடு : ஒரு கணினி முறைமையில் இயக்குவோ ரைக் குறிக்கும் எழுத்துகள் அல்லது எண்களின் குழு.

access control : அணுகுக் கட்டுப்பாடு : அணுகுக் குறியீட்டைப் பயன் படுத்தும் செயல்முறை. இதன் மூலம் ஒரு கணினியை அங்கீகரிக்கப்பட்ட வர் மட்டுமே பயன்படுத்தும் வகை யில் கட்டுப்படுத்தப்படுகிறது.