பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ACMST 47 action

கணினி வல்லுநர்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடுபடும் உலகின் மிகப் பெரிய கல்வி மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கப்பட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வி யாளர்கள் தொழில் செய்வோர் இடையே நடைபெறும் விவாதங் களைக் கொண்ட மதிப்பு மிக்க இதழ் களை வெளியிட்டும் எண்ணற்ற கருத்தரங்குகளை நடத்தியும் தொழில் நுட்பத் திறனுக்காகப் புகழ் பெற்றது.

ACMST : ஏசிஎம் எஸ்டி : Association for Computers in Mathematics and Science Teaching என்பதன் முன்னெ ழுத்துக் குறும்பெயர். கணிதம் மற் றும் அறிவியல் கல்வியில் கணினிகள் சங்கம். இது கல்வியில் கணினியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண் டுள்ள கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில் முறை அமைப்பு.

acoustic coupler: ஒலி இணைப்பி; ஒலி இணைப்புச் சாதனம் : ரப்பர் கோப்பை கள் வழியாக தொலைபேசியின் கைக்கொள் பகுதியுடன் இணைக்கப் படும் மோடெம். இது கணினி தரும் சமிக்ஞைகளை தொலைபேசியின் வாய்பேசி உணரக் கூடிய ஓசையாக மாற்றுகிறது. தொலை பேசி ஓசை களை கணினி படிக்கக் கூடிய மின் சார சமிக்ஞைகளாக மாற்றுகிறது. இவை ஒலி மோடெம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை எந்த வகை தொலைபேசியுடனும் இணை யக் கூடியவை. நேரடி இணைப்பு மோடெம்களை ஒரு தொலைபேசி அமைப்புடன் இணைக்கத் தொகுப் பியல் தொலைபேசி இணைப்புத் தேவை. ஒரு விநாடிக்கு 1,200 துண்மி என்பது இதன் தகவல் பரிமாற்ற வேகம்.

acoustic delay line : ஒலி அடிப்படையின் தாமதத்தடம்.

acoustic memory : ஒலி நினைவகம்: தொடர்ச்சியாக ஒரு சமிக்ஞையை மீண்டும் மீண்டும் உருவாக்குவதன் மூலம் தகவலைச் சேமிக்கும் இடம்.

acoustic modem : ஒலி அதிர்விணக்க நீக்கி; ஒலி மோடெம் : இரும சமிக் ஞைகளை ஒலி அலை வரிசைகளாக மாற்றுவதன் மூலம் தகவல்களை அனுப்பிப் பெறுகிறது.

acoustic sound enclosure : ஒலித் தடுப்பு உறை : ஓர் அச்சுப்பொறி அல் லது பிற எந்திரங்களில் பொருத்தி ஓசையை மட்டுப்படுத்தும் சாதனம்.

ACPA : ஏசிபிஏ : கணினி ஆணைத் தொகுப்பு பகுப்பாய்வாளர் சங்கம் எனப் பொருள்படும். Association of Computer Programmer and Analysts என்பதன் குறும் பெயர். கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரது பன் னாட்டுச் சங்கம். தொழில் நுணுக்கப் பிரச்சினைகளில் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கிறது. மற்றும் தொழில் நுணுக்கத் திறனை வளர்த்துக் கொள்ள கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகள், மாநாடுகள் மூலம் வாய்ப்பளிக்கிறது. தேசிய அளவிலும் பகுதி அளவிலும் தகவல் கள் நிறைந்த துறைசார் வெளியீடு களை வழங்குகிறது. மற்றப் பிரிவு களைச் சேர்ந்த தொழில் நுணுக்கத் திறனாளருடன் கருத்துப் பரிமாற் றத்தை ஊக்குவிக்கிறது.

action : செயல் : குறிப்பிட்ட சூழலில் வெளியாகும் செயற்பாடு.

actionentry: செயல் பதிவு.

action oriented management report: செயல்சார்ந்த மேலாண்மை குறிப்புரை : சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற