பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

actuator 49 adapter ROM

actuator : செயல் ஊக்கி தொகுப்பி: காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல், முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு.

ACU : ஏசியு : தன்னியக்கத் தொலை பேசி அழைப்புப் பிரிவு எனப் பொருள்ப டும் Automatic Calling Unit என்பதன் குறும் பெயர். இது தொலைபேசி இணைப்பில் அழைப்பு களை வணிக எந்திரம் ஒன்று அனுப்ப அனுமதிக்கிறது. ada : அடா : ஒரு கணினி மொழி. அமெரிக்க இராணுவத்துறை உரு வாக்கிய உயர்திறன் ஆணைத் தொகை மொழி. உலகின் முதலாவது பெண் ஆணைத் தொகை வரைவாள ரான அடா அகஸ்டா லவ்லேஸ் நினைவாக அடா' எனப் பெயரிடப் பட்டது.

Ada Lovelace : அடா லவ்லேஸ்: சார்லஸ் பாபேஜுடன் பணியாற் றிய பெண். அப்பெண் பைரன் பிரபுவின்மகள்; கணிதவியலார். உலகின் முதல் ஆணைத் தொடர் வரைவாளர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

ADAPSO : ஏடாப்சோ : Association of Data Processing Service Organiza tion என்பதன் குறும் பெயர். தகவல் கையாளும் சேவை நிறுவனச் சங் கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப்பினர்களின் பெயர் களை அகர வரிசையில் தொகுப் பாக வெளியிடுகிறது.

adapter boards: பொருத்துப் பலகைகள்; இயைபுப் பலகைகள் : அச் சிடப்பட்ட மின் இணைப்புப் பலகைகள். இவை ஒரு முறை மைப் பலகையைச் சுற்று உள் ளீட்டு, வெளியீட்டுக் கருவிகளு டன் இணைக்கிறது அல்லது ஒரு முறைமையுடன் சிறப்பான பணி களைச் சேர்க்கிறது.

adapter cards : பொருத்து அட்டைகள்; இயைபு அட்டைகள் : இயைபுப் பலகைகளுக்கான மாற்றுப் பெயர்.

adapter ROM : நினைவகம் ஏற்பி; இயைபு நினைவகம் : ஏற்புச் சாதனத் தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட ஏற்பு நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கிகளில் ஏற்பு ரோம்கள் உள்ளன. எஸ்சிஎஸ்ஐ ஹோஸ்டு ஏற்பு கூடுதல் நினைவகம், வெளிப்