பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ad hoc qu 52 aircraft

ad hoc query : தற்காலிக வினா ; தற்காலிகத் தேடல் : கோப்பில் எந்த இடத்திலாவது இருக்கும் தகவலை திரும்பப் பெறுவதற்கான திறன்.

add-subtract time : கூட்டு - கழிப்பு நேரம்: இரண்டு எண்களைக்கூட்டவும், கழிக்கவும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம்.

administrative data processing : நிர்வாகத் தகவல்கள் செயலாக்கம் : நிர்வாகம் அல்லது நிறுவனம் ஒன் றின் ஆணை தொடர்பான தகவல் களைச் செய்முறைப்படுத்தும் துறை யாகும்.

ADP : ஏடிபி : Automatic data processing என்பதன் குறும் பெயர். தானி யக்க முறையில் தகவல்களைச் செய் முறைப்படுத்தும் பணி நிகழ்கிறது.

advanced BASIC : மேம்பட்ட பேசிக் மொழி : துவக்க 'பேசிக் ஆணைத் தொடரை விட மேம்படுத்தப்பட்ட வகையில் அதனைச் செய்முறைப் படுத்துதல்.

AEDS : ஏஇடிஎஸ் : Association for Edu cational Data System கல்வித் தகவல் முறைமைகளுக்கான சங்கத்தின் குறும்பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தகவல் பணியில் ஈடுபட்டிருப்பவர் களுக்குச் சேவை செய்யும் லாப நோக்கமற்ற தனியார் நிறுவனம். நவீனக் கல்விக்கும் நவீனத் தொழில் நுணுக்கத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிய கருத்துகளை தக வல்களைப் பரிமாற்றிக் கொள்ள ஒரு அரங்கத்தை வழங்குகிறது. ஆண்டுக் கொருமுறை மாநாடு, தேசிய, வட்டார, உள்ளூர் பயிலரங்குகளை நடத்துகிறது. மேனிலைப் பள்ளி மாணவர்களுக்காகக் கணினி செயல் முறைப் போட்டியொன்றை நடத்துகிறது. காலாண்டு அறிக்கை சஞ் சிகை ஆகியவைகளை வெளியிடுகிறது.

AFCET : ஏஎஃப்சிஇடி : Association Francaise pour la Cybernetique Economique et Technique என்ப தன் குறும்பெயர்.

AFIPS : ஏஎஃப்ஐ பிஎஸ்: American Fed eration of Information Process Societies என்பதன் குறும்பெயர். தகவல் களைக் கையாளும் சங்கங்களின் அமெரிக்கக் கூட்டமைப்பின் குறும் பெயர்.

AI: ஏஐ: Artificial Intelligence என்ப தன் குறும் பெயர். செயற்கை நுண் ணறிவு. இது கணினி அறிவியலின் ஒரு கிளையாகும். அது மனிதர் களைப் போல கணினிகளைச் சிந் திக்கவைக்கும் முயற்சியில் ஈடுபடு கிறது. இந்நோக்கங்களுக்காக மனிதப் பகுப்பாய்வு குறித்து பெருக ஆய்வுகள் நடந்துள்ளன.

aiken, Howard Hathaway : (1900-1973) அய்க்கன் ஹோவர்ட் ஹாத்வாய் : (1900-1973) 1937 - க்கும் 1944-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தானியங்கு தொடர்முறைக் கட்டுப்பாட்டு கணக் கிடுவான் எனும் முதல் மின்னியந் திரக் கணினியை உருவாக்கி வடி வமைத்த வல்லுநர்கள் குழுவின் தலைவர்.

aircraft simulator : வானூர்தி மாதிரி யமைப்பு : வானூர்தி விமானிகளுக் குப் பயிற்சி அளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத் தில் இருப்பது போன்ற சூழ்நிலை யை உருவாக்கி மனம் வியக்கும்