பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

problem sol

தும் அலகு சிக்கலான நிலையில் இருக்கும்போது நிறைவேற்றப் படும் செயல்முறை; சிறப்புரிமை ஆணைகளைக் கொண்டிராத ஒரு செயல்முறை.

problem solving: £3,5603761; flöö6) தீர்த்தல்: ஒரு கணினியினால் தீர்க்கப் படக்கூடிய ஒரு சிக்கல். இதற்கு ஒரு துல்லியமான கணிதச் சமன்பாடு தேவைப்படுவதில்லை. எனினும், கணினி உணர்ந்து கொள்ளக்கூடிய சில விதிகளின் தொகுதி தேவைப் படும். இது ஆறு நடவடிக்கைகள் அடங்கிய ஒரு செய்முறையாகும்: (1) சிக்கலை அடையாளங் காணல் (2) தொடர்புடைய தகவல்களைச் சேகரித்து வகைப்படுத்துதல் (3) மாற்று உத்திகளை உருவாக்குதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் (:) செயல்முறைப்படுத்துதல் (5) செயல் முறையை நிறைவேற்றுதல் (6) தொடர் நடவடிக்கையினை மேற் கொள்ளுதல். அனுபவமும், உரிய சிக்கல் தீர்வு உத்திகளைக் கையாளு வதும் சிக்கல்களுக்குத் தீர்வு காண் பதை எளிதாக்கும். procedural language : 560L(p60s) மொழி : கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற ஆணைத்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் ஆணைத் தொடரமைப்பு மொழி. ஆணைத் தொடராளர்கள் அத்தகைய மொழி களில் எழுதும்போது தகவல் செய லாக்கம் மற்றும் ஆணைத் தொடர மைத்தல் சார்ந்து சிக்கல்களை தீர்ப் பதற்குத் தேவையான நடவடிக்கை முறையினை உருவாக்குவார்கள்.

procedure : நடைமுறை; செயற்படு முறை : செயல் முறை : 1.ஒரு சிக்க லுக்குத் தீர்வு காண மேற் கொள்ளப் படும் நடவடிக்கையின் வரிசை

546 process

முறை. 2.செயல் முறைக்குத் தேவை யான ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிற ஒர் உயர்நிலை மொழிச் செயல் முறையின் பகுதி. 3. ஒரு கணினிச் செயல்முறையின் மற் றொரு பெயர். procedure division : 560LQpsospi பகுப்பு: செயல்முறைப் பகுப்பு: ஒரு கோபால் செயல்முறையின் நான்கு முக்கிய பகுதிகளில் நான்காவது பகுதி. procedure oriented : IB&OL(p60p சார்ந்த: படி ஏ விலிருந்து படி பி-க் குப் போவதற்காக பயனாளர் பின் பற்றுகின்ற பயன்பாடு. தகவல் நுழைவு ஆணைத் தொடர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

procedure oriented language : நடைமுறைசார்ந்த மொழி: விரிவான சிக்கல்களின் ஒரு தொகுதிக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தப்படும் நடைமுறைகளை வசதியாக எடுத்து ரைப்பதற்கு வடிவமைக்கப்பட் டுள்ள ஒரு செயல்முறைப் படுத்தும் மொழி. எந்திர மொழி, சிக்கல் சார்ந்த மொழி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. process : செய்முறை; செயற்பாங்கு; நடைமுறை : 1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான,திட்ட மிட்ட செயற்பாடுகளின் வரிசை முறை. 2.செப்பமற்ற தகவல்களை பயனுள்ள செய்திகளாக உருமாற் றுதல். process bound: Sumbug)|Q&ti,(pop: செய்முறைப்படுத்தியின் வேகத் தினால் வரம்புறுத்தப்பட்டுள்ள கணினியமைவு. process controỉ:Qstü(tp6mpở 3L(Đủ பாடு : எண்ணெய்ச் சுத்திகரிப்பு, எஃகு உற்பத்தி போன்ற தொழில்