பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

reorder 581

வளைவுத் தூண்டுதல்கள் உள்ள டங்கியிருக்கும். reorder point: sostól(5ủLļeļ6T6|: Si இனத்திற்கும். கூடுதலாக அனுப் பாணை அனுப்புவதற்கு முன்பு கை வசமுள்ள மிகக்குறைந்த கையிருப்பு அளவு. பட்டியல் கட்டுப்பாட்டில் இன்றியமையாத அம்சம்.

repagination . மறுபக்கமிடுதல் : ஒரு பலபக்க ஆவணத்தில் திருத்தம் செய்யும்போது, ஒரே சீரான பக்க நீளமும், தோற்றமும் ஏற்படும் வகை யில் ஒரு சொல் செயலி மூலம் சரியமைவு செய்யும் செய்முறை. repaint . மறுவரைவு : நாளது தேதி வரையிலான வரைகலை அல்லது வாசகத் தகவல்களைப் பிரபலிக்கும் வகையில் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒர் உருக்காட்சியை மறுபடியும் வரைந்துகாட்டுதல். இது பல்வேறு வரைகலைப் பொறியமைவுகளில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இது, காட்சித் திரையில் காட்டப் படும் வடிவமைப்பை தானாகவே மறுவரைவு செய்கிறது. repeat counter : Lisin(ypsopů Liśl6ųở சாதனம் : ஒரு செயல்முறையில் ஒரு நிகழ்வு எத்தனை முறை நிகழ்கிறது என்பதைப் பதிவு செய்யும் செயல் முறைப் பதிவுச் சாதனம். இது பின்னர் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பயன்படுகிறது. repeater; மறுவுருவாக்கி : செய்தித் தொடர்புகளில் அனுப்பீட்டுத் தொலைவினை நீட்டிப்பதற்காக தக வல் சைகைகளைப் பெரிதாக்குகிற அல்லது மறு உருவாக்கம் செய்கிற ஒரு சாதனம். repeating decimal number : Léin முறைத் பதின்ம இலக்கம் : முடிவு றாமல் திரும்பத் திரும்ப வரும்

report

பதின்ம எண். எடுத்துக்காட்டு: .3333333...... அல்லது .31282828....... repeating number : L16öTop&DID 6T6jvT. repeatkey:பன்முறைவிசைப்பலகை: மீண்டும் அழுத்தாமல் திரும்பத் திரும்பத் தொடர்பு ஏற்படும் வகை யில் அழுத்திவைத் திருக்கக்கூடிய விசைப்பலகயிைன் விரற்கட்டை.

reperforater: lopig soom SG 40568 : காகித நாடாத்துளை.

repertoire : அறிவுறுத்தத் தொகுதி : ஒரு குறிப்பிட்ட கணினிக்கு அல்லது கணினி குடும்பத்திற்குச் சொந்த மான ஆணைகளின் முழுத் தொகுதி. இதனை ஆணைத் தொகுதி என்றும் கூறுவா. repetition:மறுநிலை ஆணை: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆணை களை குறிப்பிட்ட தடவைகள் நிறை வேற்றும்படி செய்கிற ஆணை.

replacement theory : L'Élsosolds jä கோட்பாடு: தேய்மானம், செயலழிவு பற்றிய கணிதம். இது பதிலமைவுச் செலவினை மதிப்பிடுவதற்கும், உகந்த அளவுப் பதிலமைவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும் பயன்படுகிறது.

report : அறிக்கை : பொதுவாக, வெளிப்பாட்டுத் தகவல்களுடன் தொடர்புடையது. தொடர்புடைய செய்திகளைப் படிப்பவர்கள் எளி தில் புரிந்துகொள்ளும் வகையில் வரைபடமாக்குதல் இதில் அடங்கி யுள்ளது. பயனாளருக்குத் தகவல் களை வழங்குவதற்கான ஒரு பொது வான வழிமுறை. பெரும்பாலான அறிக்கைகள் திரைக்காட்சியில் அல்லது அச்சிட்டபட்டியல்களில் காட்டப்படும்.