பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

American Sta 57 analog


அடிப்படைகள் ஆகியவற்றில் தேடு தல், தயாரிப்பு ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள்.

American Standard Code for Informa tion : அமெரிக்கத் தகவல் பரிமாற்றத் திட்டக் குறியீடு : தகவலுக்கான அமெரிக்கத் தரக் குறியீடு.

American Statistical Association (ASA): அமெரிக்க புள்ளியியல் சங்கம்: புள்ளி விவர இயலை மேம்படுத்து வதைக் குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு அமைப்பு. 1983இல் உரு வாக்கப்பட்டது. முடிவுகளை மேற் கொள்வதற்கும், முன் அறிவிப்புச் செய்வதற்கும் கையாளப்படும் உத்தி களின் தரத்தை உறுதி செய்ய ஆய்வு மற்றும் பயன்பாட்டில் புள்ளி விவ ரங்களின் தரத்தை பேணுகிறது. தொழில் முறை அறிவைப் பரிமாறு தல், வளர்ச்சிகளை அறிவித்தல் மூலம் மாணவர்களை வணிகத்துக் கும் தொழில் துறைக்கும் தயார் செய் கிறது.

amiga : அமிகா : பிரபலமான குறுங் கணினி அமைவு. காமடோர் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு.

ampere : ஆம்பியர்; மின்னோட்ட அலகு : மின்சாரத்தின் அடிப்படை எஸ்ஐ அலகு.

amplifier : பெருக்கி : உள்ளீட்டு மின் குறிப்பின் மின்னழுத்தம், மின் னோட்டம், மின்னாற்றலைப் பெருக்குவது.

analog : ஒத்திசை வடிவிலான; ஒத்திசை இயல்; ஒத்திசை முறை; ஒத் திசைவிலான : தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒத்திசைவுகளால் குறிப்பது. இலக்கவியலுக்கு மாறானது.

analogchannel : ஒத்திசைவானவழித் தடம் : மாறும் மின் சமிக்ஞைகளை தொடர்ச்சியாக அனுப்ப அல்லது பெற பயன்படும் ஒரு தகவல் தொடர்புத் தடம்.

analog circuit : ஒத்திசைவான மின் சுற்று : வெளியீடானது தொடர்ச்சி யான உள்ளீட்டின் பணியாக உள்ள மின்சுற்று. இலக்கவியல் மின் சுற் றின் தனித்தனி மதிப்புகளுக்கு மாறான நிலை.

analogcomputer : ஒத்திசைக் கணினி: மாறும் வெப்ப நிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து இயற் பியல் அளவுகளாகக் காட் டும் கணினி . இலக்கவியல் கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது.

analog data : ஒத்திசைத்தக வல்: இம்முறையில் தகவ லுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப் படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்ஞைகள் அலைவியல்