பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scissor

600

scratch


 பான முறை. எடுத்துக்காட்டு: 0.32619x107 அல்லது 0.32619E+07 = 32,61,900.

scissoring : கத்தரித்தல் : பயன்படுத்துவோரின் குறிப்பிட்ட எல்லைகளில் அமைந்துள்ள காட்சிச்சாதனத்தில் ஒரு வடிவமைப்பின் பகுதிகளைத் தானாகவே அழித்துவிடுதல் அல்லது வெட்டிவிடுதல்.

SCM : எஸ்சிஎம் : கணினி மருத்துவக் கழகம் எனப் பொருள்படும் Society for Computer Medicine என்ற ஆங்கிலத் தொடரின் குறும்பெயர். இந்தக் கழகம், மருத்துவப் பயன்பாடுகளில் தானியக்க முறையைப் பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக மருத்துவர்களையும் கணினி அறிவியலாளர்களையும் ஒருங்கிணைக்கிறது.

scope : காட்சிப் பரப்பு , நோக்கெல்லை, செயல் எல்லை: ஒரு மென் பொருள் செயல்முறையின் கட்டுப்பாட்டுப் பரப்பெல்லை. 1. ஊசல் மானி, பொதுக் காட்சி முனையம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் CRT வகைத் திரை. 2. செயல்முறைப்படுத்துவதில், ஒரு செயல்முறைக்குள் உள்ள மாறியல் உருக்களின் காட்சித்திறன். 3. தகவல் தளத்தில் "அடுத்த 50", "கோப்பு முடிவுவரையிலான நடப்புப் பதிவு" என்பன போன்ற பல்வேறு பதிவுகள்.

SCO open desktop : ஸ்கோ திறந்தநிலை மேசைப் பொறியமைவு : 386-களுக்கான பலர் பயன்படுத்தும், உள்ளபடியான நினைவக வரைபடச் செயற்பாட்டுப் பொறியமைவு. UNIX, XENIX, DOS, X-பலகணிப் (விண்டோஸ்) பயன்பாடுகள் ஆகியவற்றை இயக்கும் SCO -சிலிருந்து வெளியிடப்பட்டது.

SCR : எஸ்.சி.ஆர் : சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி என்று பொருள்படும் 'Silicon Controlled Rectifier என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பெருமளவு நேர்மின்னோட்டத்தை அல்லது மின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு மின் கடத்தாச் சாதனம். இதன் இயல்புகள், பழைய வெற்றிடக் குழல் தைராட்ரானைப் போன்றவை. எனவே, இதனைச் சிலசமயம் "தைரிஸ்டர்" (thyristor) என அழைக்கின்றனர்.

scrambler : உந்தியேறு கருவி: பூட்டு விசைக்காகத் தகவல்களைக் குறியீடுகளாக்குவதற்கான சாதனம் அல்லது மென்பொருள் செயல்முறை.

scrambling ; உந்தி ஏறுதல் : மறை நீக்கம் செய்ய முடியாதவாறு தகவல்களைக் குறியீடாக்குதல்.

scrap book : ஒட்டுப் புத்தகம், கிறுக்கும் நூல், வரைவு நூல் : ஆவணங்களில் அடிக்கடிப் பயன்படுத்துவதற்காக வாசகங்களையும் படங்களையும் சேமித்து வைக்கும் பணி.

scratch : கீறு, விரைவாக எழுது : நினைவகத்திலிருந்து தகவலை நீக்குதல்.

scratch file : நீக்கக் கோப்பு, கீறல் கோப்பு, விரைவெழுத்துக் கோப்பு : ஒரு துணைச்சேமிப்புச் சாதனத்தில் ஏற்றப்பட்டுள்ள தகவல்கள் முழுவதையும் அல்லது பகுதியை படியெடுத்து தகவல்களின் கணிசமான கோப்புகளைச் செய்முறைப்படுத்தும்போது உருவாக்கப்படும் தற்காலிகக் கோப்பு.

scratchpad: குறிப்பு அட்டை, கீற்றுத் திண்டு, கீறல் பட்டை, விரைவெழுத்துக் களம் : சில கணினிகளில் பதிவேடுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சிறிய துரிதச் சேமிப்