பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

scratchpad

601

scre



பகம். இதனைப் புதை நினைவகம் எனறும கூறுவர்.

scratchpad storage : அழிப்புத் திண்டுச் சேமிப்பகம், விரைவெழுத்து சேமிப்பகம் : தகவல்களைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக இடம். அழிப்புத்திண்டு நினைவகங்கள், அதிவேக ஒருங்கிணைந்த சுற்று வழிகள் ஆகும்.

scratch tape : அழிப்பு நாடா, விரைவெழுத்து நாடா: அழித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தத்தக்க காந்த நாடா.

screen : திரை : தகவல்கள் காட்சியாகக் காட்டப்படும் பரப்பு. எடுத்துக் காட்டு: ஒளிப்பேழைக் காட்சித் திரை.

screen capture : திரைப் பிடிப்பு : தற்போதுள்ள நேரடித்திரை உருக்காட்சியை ஒரு வாசகத்திற்கு அல்லது வரைகலைக் கோப்புக்கு மாற்றுதல்.

screen dump : திரைச் சேமிப்பு, திரைத் திணி : தற்போது ஒரு காட்சித் திரையில் தோன்றும் தகவலை ஒரு அச்சுப் பொறிக்கு அல்லது வேறு வன்படிச் சாதனத்திற்கு மாற்றுகிற செய்முறை.

screen editing : திரைத் திருத்தம்:

Screen font : திரை எழுத்துரு : நேரடித் திரைக்காட்சியில் பயன்படுத்தப்படும் எழுத்து உரு. WYSIWYG பொறியமைவுகளில் அச்சடிப்பு எழுத்து உருக்களுக்கு இயன்றவரை நெருக்கமாக இருக்கவேண்டும். அச்சடிப்பு எழுத்து உருவுக்கு மாறுபட்டது.

screen generator: திரை உருவாக்கி: தனியாக உருவாக்கும் திரைக் காட்சியை ஏற்படுத்த பயன்படும் சிறப்புப் பயன்பாட்டு ஆணைத் தொடர்.

screen memory: திரை நினைவகம்.

screen overlay : திரைமேல் விரிப்பு : 1. காட்சித் திரையில் கூசொளியைக் குறைக்கின்ற தெளிவான நுண்ணிய வலைத்திரை. 2. திரையிலுள்ள காட்சிப் பொத்தான்களைத் தொடுவதன் மூலம் பயனாளர் கணினிக்கு ஆணையிடுவதற்கு அனுமதிக்கிற தெளிவான தொடுசேணம். 3. திரையில் காட்சியாகக் காட்டப்படும் தற்காலிகத் தகவல் பலகணி. திரை மேல் விரிப்பை நீக்கியதும் மேல் விரிப்பு செய்யப்பட்ட திரையின் பகுதி மீட்கப்படுகிறது.

screen position: திரை இடநிலை : ஒரு காட்சித் திரையில் வரைகலைத் தகவல்களின் அமைவிடம்.

screen prompt : திரை நினைவூட்டு : பயனாளர் துல்லியமாகவும், முழுமையாகவும் தகவல்களை உட்பாடு செய்வதற்கு உதவுகிற ஒளிக் காட்சித் திரையின் மீது காட்சியாகக் காட்டப்படும் ஓர் அறிவுறுத்தம்.

screen saver : திரைக் காப்பு : பல கணினிகளில் ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்குச் சுட்டு நுண்பொறியை நகர்த்தாமல் அல்லது ஒரு விசைப் பலகை விரற்கட்டையை அழுத்தாமல் இருக்கும்போது திரையில் தோன்றும் ஒரு நகரும் படம் அல்லது தோரணி.