பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

search arg

603

second



தேடி மாற்று : ஒரு குறிப்பிட்ட எழுத்து வரிசை முறையைக் கண்டறிந்து அதற்குப் பதிலாக ஒரு புதிய வரிசை முறையை மாற்றுகிற மென்பொருள். இது சொல் செய்முறைப்படுத்தும் பயன்பாடுகளில் முக்கியமானது.

search argument: தேடும் வாதமுறை : ஓர் அட்டவணைத் தேடுதலில் இணைப்பு செய்யக்கூடிய தகவல் இனம்.

search engine: தேடு பொறி : இணையத்தில் (internet) நாம் விரும்பும் தகவலை தேடித் தரும் மென்பொருள்.

search key : தேடும் விசைப்பலகை விரற்கட்டை, தேடும் விசை, தேடு சாவி: ஒரு தேடுதலை நடத்தும் நோக்கத்திற்காக ஒவ்வொரு இனத்தின் குறிப்பிட்ட பகுதிகளுடன் ஒப்பிடப்படும் தகவல்கள்.

search memory: தேடல் நினைவகம்.

seasonally adjusted: பருவமுறைச் சரியமைவு : முந்திய போக்குகளை மறைக்கிற அல்லது மாற்றமைவு செய்கிற பருவமுறைக் காரணிகளை அனுமதிப்பதற்குச் சரியமைவு செய்யப்பட்ட ஒரு தகவல் தொகுதியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் .

second: வினாடி, நொடி: மெட்ரிக் முறையில் கால அளவின் அடிப்படை அலகு. பழக்கமான ஆங்கில முறையில் பயன்படுத்தப்படுகிறது.

secondary channel: துணைநிலை அலைவரிசை : செய்தித் தொடர்களில், முதன்மை அலைவரிசையிலிருந்து பெறப்பட்ட ஒரு துணை அலைவரிசை. இது, குறைகண்டறிய அல்லது மேற்பார்வை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது தகவல் செய்திகளைக் கொண்டு செல்வதில்லை.

secondary data: துணைநிலைத் தகவல்: இது மற்றொரு நோக்கத்திற்காக ஏற்கெனவே சேகரிக்கப்பட்டது. இப்போது ஒரு தகவல் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுவது. கட்டுரைகள், செய்தியிதழ்ச் செய்திகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் இதில் அடங்கும்

secondary index: துணைநிலை வரிசை முறை: ஒரு தகவல் கோப்புக்காக வைத்துவரப்படும் வரிசை முறை. ஆனால், கோப்பின் தற்போதைய செய்முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்த இது பயன்படுத்தப் படுவதில்லை.

secondary key: துணை விரற்கட்டை, இரண்டாம் நிலை விசை, துணைச் சாவி : ஒரு கோப்பிலுள்ள பதிவேடுகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் புலம். இது தனிச் சிறப்பானதாக இருக்க வேண்டியதில்லை.

secondary memory : துணைநிலை நினைவகம்.

secondary storage: துணைநிலைச் சேமிப்பு , இரண்டாம் நிலை நினைவகம் : ஒரு கணினியின் அடிப்படை உள்முக நினைவகத்தின் குறையை நிரப்புகிற நினைவகச் சாதனம். இதனைத் துணைச் சேமிப்பு என்றும் கூறுவர். இது தலைநிலைச் சேமிப்பு என்பதற்கு மாறானது.

secondary storage device : துணை நிலைச் சேமிப்புச்சாதனம்.

second generation computers : இரண்டாம் தலைமுறைக் கணினிகள்: கணினிகளின் தொழில் நுட்ப வளர்ச்சியில் இரண்டாம் தலை