பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AND ope 59 ANSI

உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளீடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆகும். உள்ளீடுகளில் ஏதாவது ஒன்று தருக்கம் பூஜ்யமாக இருந்தால் வெளி யீடு பூஜ்யமாக அமையும். 2. கணினி ஒன்றின் வாயில் மின்னிணைப்பு ஒன் றுக்கு மேற்பட்ட உள்ளீட்டு முனை யங்களைக் கொண்டது. எல்லா உள் ளீடுகளுக்கும் ஒரே நேரத்தில் துடிப்பு வழங்கப்படாவிட்டால் வெளியீட்டுச் சமிக்ஞை எதுவும் உருவாகாது.

AND operation : இணைப்புச் செயல் : இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவைகளை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை ' என்று வர வேண்டுமென்றால் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென் றால் வெளியீடு 'பொய் ஆகிவிடும். android : ஆண் மனிந்திரம் : மனிதர் களைப் போன்ற ஆண் தானியங்கு எந்திரம்.

angstrom : ஆங்ஸ்ட்ராம்; ஒளி அலை நீளளவை: நீட்டலளவை அலகு : 2.5 சென்டி மீட்டரில் 1/25 கோடி. சிப்பு - ஒன்றில் உள்ள மின்னணுவியல் கருவிகளில் உள்ள பாகங்களை அளக்கப் பயன்படுபவை.

ANI : அனி: Automatic Number Identifi cation, என்பதன் சுருக்கம். தொலை பேசி அமைப்புகளின் ஒரு தன்மை. அழைப்பவரின் எண்ணை கணினி அமைப்பின் மூலம் பெறுபவருக்கு அனுப்பி, அழைப்பவரை அடை யாளம் காண உதவுவது.

animated graphics : இயங்கு வரை கலை: இயங்கும் வரைபடங்கள் அல் லது கருத்துப் படங்கள். காந்த வட்டு களில் வரை படங்கள் ஒளிக்காட்சி தோற்றங்குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்ளும்.

animation: இயக்கப்படுத்தல் : நிகழ்வு ஒன்றின் தொடர் வரிசைப் படங் களை மிக விரைவாக வெளிப்படுத்து வதன் மூலம் இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்குதல். இவ் வுத்தி கணினி உருவாக்கும் திரைப் படங்களைத் தயாரிக்கப் பயன் படுத்தப்படுகிறது.

anion : எதிர்மின்மம் : மின்னூட்டத் திரவத்தில், நேர்மின் முனையை நோக்கி நகர்கிற ஓர் எதிர் அயனி (மின்மயத்தூள்). anisotropic : திசை மாறுபாட்டுப் பண்பு: அளவுக்கும் திசைக்கு மேற்ப மாறும் அனுப்பு வேகம் போன்ற பண்புகளைக் குறிப்பிடுகிறது. annotation : குறிப்புரை : சேர்க்க ப் பட்ட விளக்கக் குறிப்பு.

annotationsymbol : குறிப்புக் குறியீடு; விளக்கக் குறியீடு: தொடர் வரை படம் ஒன்றில் செய்திகள் மற்றும் குறிப்புகளைச் சேர்க்கப் பயன்படுத் தப்படும் குறியீடு. மற்ற தொடர் வரைபடம் துண்டுக் கோடுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

anomaly : முரண் : இயல்புக்கு மாறானது.

ANSI : அன்சி : அமெரிக்கத் தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் எனப் பொருள்படும் American National Stan dards Institute நிறுவனத்தின் குறும் பெயர்.

ANSI character set : 'அன்சி ' எழுத் தெண் குறியீட்டுத் தொகுதி: எழுத்து எண் மற்றும் சிறப்புக் குறியீடு களைக் குறிப்பிடும் குறியீட்டுத் தொகுதி.