பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

application gen 62 applications

உருவாக்குதல், மேம்படுத்தல் மற்றும் பயன்பாட்டு ஆணைத் தொடர்கள் இயக்க அனுமதிக்கும் ஆணைத் தொடர் மொழி மற்றும் அதன் தொடர்பான பயன்பாடுகள். விசாரணை மொழிகள், அறிக்கை தயாரிப்புக் கருவிகள் உள்ளிட்ட டிபிஎம் எஸ் -ஐ இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

application generator : பயன்பாட்டு உருவாக்கி : பிரச்சினையின் விவரங் களிலிருந்து பயன்பாட்டு ஆணைத் தொடரை உருவாக்கும் மென் பொருள். உயர்நிலை கணினி மொழி யைவிட ஒன்று அல்லது மேற்பட்ட உயர்நிலையில் உள்ளது. இருப் பினும், ஆணைத் தொடர் அமைப் பவர் சிக்கலான பணிகளை விவரிக் கக் கணித, மொழியமைப்பு விளக் கங்களை அமைத்துத் தர வேண்டும்.

application notes : பயன்பாட்டுக் குறிப்புகள் : வழக்கமான உதவிக் எப்பு கையேடுகளுடன் விளக்கங் கள் மற்றும் பரிந்துரைகளைச் சேர்த்து விற்பனையாளர் கொடுப்பது.

application-oriented language : பயன்பாடுசார் மொழி; பயன் நோக்கு மொழி: ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான ஆணைத் தொகுப்பு மொழி. இதன் கட்டளை கள்கணினியைப் பயன்படுத்துவோர் கையாளும் சொற்களைக் கொண்டி ருக்கும் அல்லது அவற்றை ஒத்திருக் கும்.

application package : பயன்பாட்டுத் தொகுப்பு : ஒரு குறிப்பிட்ட பயன் பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட கணினி சுற்றுச் செயல் அல்லது சுற்றுச்செயலின் தொகுப்பு. தொழில் துறைக்காக அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. சிறப்பு அல்லது பொது நோக்கப் பணிகளுக் காக எழுதப்பட்ட கணினி ஆணைத் தொடர்கள். சிலவற்றில் ஒரே ஒரு பணி மட்டுமே இருக்கும். மற்ற வற்றில் பல பணிகள் இருக்கலாம்.

application portfolio : பயன்பாட்டு மதிப்பீடு : ஒரு திட்டமிடும் கருவி. இப்போதுள்ள மற்றும் திட்டமிட்டு வரும் தகவல் அமைப்புகளின் பயன் பாடுகளை அவை உண்டாக்கும் வருமானம், அவற்றை ஏற்படுத்தும் செலவு ஆகியவை பெரிய வணிகப் பணிகளுக்கு உதவுமா என்று மதிப்பிடுதல்.

application processor : பயன்பாட்டுச் செயல்முறைப்படுத்தி : கட்டுப்பாட் டுப் பணிகள் அல்லாமல் தகவல் களை செயலாக்கம் செய்யும் கணினி.

application programme : பயன்பாட்டு ஆணைத் தொடர் : சொல் செயலாக்க விலைப்பட்டியலிடல், இருப்பு கட்டுப்பாடு போன்ற பணிகளைச் செய்ய எழுதப்படும் மென்பொருள்.

applications programmer : பயன்பாட் டுக்கான ஆணைகளின் தொகுப்பாளர் : முறைமை வகுப்போரைப் போன்றல் லாது குறிப்பிட்ட செயல்பாட்டுக் கான ஆணைகளின் தொகுப்பை உருவாக்குகிறவர்.

applications programming : பயன் பாட்டுக்கான ஆணைத் தொகுப்பைத் தயாரித்தல் : குறிப்பான பிரச்சினை களுக்குத் தீர்வுகளைக் காணப் பயன் படுத்துவதற்கு உரிய ஆணைகளின் தொகுப்பைத் தயாரித்தல். இது முறைமை ஆணைகளின் தொகுப் பைத் தயாரித்தலுக்கு எதிரானது.

applications programms : பயன் பாட்டு ஆணைகளின் தொகுப்பு.