பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

applications sof 63 archive


applications software : பயன்பாட்டு மென்பொருள் : பயன்படு ஆணைகள் தொகுப்பு என்பதைக் காண்க.

application specific programms :பயன் பாடு சார்ந்த ஆணைத் தொடர்கள் : வணிக அறிவியல், பொறியியல் மற் றும் பிற துறைகளில் உள்ள இறுதிப் பயனாளரின் குறிப்பிட்ட பயன்பாடு களுக்கு உதவும் பயன்பாட்டு மென் பொருள் தொகுப்பு.

applied mathematics : பயன்பாட்டுக் கணிதம் : எந்திரவியல், இயற்பியல், அல்லது கணினி அறிவியலில் நடை முறைப் பயன்பாட்டுக்குப் பயன் படுத்தப்படும் கணிதம்.

apprentice : பயிற்சியாளர்.

approximation : தோராயம் : துல்லிய மான எண் அல்ல; ஆனால் குறிப் பிட்ட பதின்ம இடத்திற்குள் முழுமையாக்கப்பட்டது.

APT : ஏபிட்டி : எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கும் முறைமை. இது ஆணைகள் குழு வின் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்படுகிறது. புள்ளிகள், கோடுகள், வட்டங்கள், சமப் பரப்புகள், கூம்பு வடிவத் தளங்கள் மற்றும் ஜியோமிதி பரப்புகளை வரையறை செய்யப் பயன்படுத்தப் படுகிறது.

arbitration : ஒரு நிலைக் காரணி : நினைவகம் அல்லது வெளிப்புறச் சாதனங்கள் போன்றவற்றை ஒன்று க்கு மேற்பட்ட ஆணைத் தொடருக் கோ அல்லது பயன்படுத்துபவர்களுக்கோ அளிக்கும் எந்திரப் பகுதிக்கு ஏற்ற விதிகளின் தொகுதி.

arcade game : விதானத் தொகுதி விளையாட்டு : கணினிவிளையாட்டுகள் நாணயத்தால் இயக்கப்படும் கருவி களால் பிரபலமாக்கப்பட்டவை. இக் கருவிகள் உயர்திறன் கொண்ட வண்ண வரைவுருக்கள் உயர்வேகச் சித்திர இயக்கம், ஒலி வழங்குதல் ஆகிய திறன்களைக் கொண்டவை. பெரும்பாலும் விளையாட்டுக் குச்சி களினால் திரையில் உள்ள வடிவம் கட்டுப்படுத்தப்படுகிறது. விளை யாட்டுகளின் விதிப்படி கணினி மதிப்புப் புள்ளிகளை அளிக்கிறது.

architecture : வடிவமைப்பு : கணினி யின் உள் இயக்க நட வடிக்கைகளின் வடிவமைப்பு . நினைவக ஆணைப் பகுதி மற்றும் உள்ளீட்டு, வெளி யீட்டு அமைப்புகள் கொண்டது.

archival : நீண்ட கால கரம் : தகவல் ஒன்றை நீண்ட காலம் சேமிப்பது தொடர்பானது.

archival store : ஆவண இருப்பகம்; நீள் சேகரம்; நெடுஞ்சேகரம் : அடிக்கடி பயன்படுத்தாமல் பின் தேவைக்கு ஆதாரமாக வைக்கப்பட்டிருக்கும் கோப்புகள்.

archive : சேமிப்பகம் : 1. துணை சேமிப்பு ஊடகத்தில் வட்டு அல்லது நாடாவில் ஆணைகள் குழு மற்றும் தகவல்களை பிரதி செய்தல். 2. எதிர்ப்பார்க்கப்படும் நீண்ட காலப் பயன்பாட்டுக்காகத் தகவல்களைச் சேமித்தல்.

archive attribute : ஆவண இயல்பு: கோப்புகளை வகைப்படுத்தும் இயல்பு நிலை. சில படிகள் மற்றும் பின்னாதரவு ஆணைத் தொடர்களில் இந்த நிலையைச் சோதிக்க முடியும்.