பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tree

680

tilde


three address computer : மூன்று முகவரிகணினி; மும்முகவரிகணினி: அதன் ஆணையிடல் முறையில் மூன்று முகவரிகளைப் பயன்படுத் தும் கணினி. சான்றாக, ADD A,B,C என்ற ஆணைகளில் A மற்றும் சார்ந் துள்ள மதிப்புகள் காட்டப்பட்டு C உடன் அதன் முடிவு சேர்க்கப்படுகிறது.

three dimentional (3-D):,முப்பரிமாண (3-D) மூவளவு : கணினி வரைகலையில், ஒரு மாதிரியின் உயரம், அகலம் மற்றும் ஆழத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் மூவிடப் பரிமாணங்கள் சேமிக்கப்படுகின்றன.

three dimentional array: முப்பரிமாண வரிசை: மூன்று மடிப்பு வகைகளை வரிசை, பத்தி, மடிப்பு - வழங்கும் வரிசை.

three point curve: முப்புள்ளி வளைவு.

three state logic element : மூன்று நிலை தருக்கப்பொருள் : மூன்று வெளியீட்டு நிலைகளை- நிறுத்தம், குறைந்த மின்சக்தி மற்றும் அதிக மின்சக்தி- தருகின்ற மின்னணு பொருள்.

throughput: முழுதும் செல்லல்: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கணினி அமைப்பு செய்யக்கூடிய பயனுள்ள செயலாக்கத்தின் மொத்த அமைப் பான அளவு.

thumbwheel : கட்டைவிரல் சக்கரம் : உள்ளிட்டுச் சுட்டியை நிலைக்க வைக்கும் சாதனம். ஒரு அச்சில் சுட்டியின் இயக்கத்தைக் கட்டுப் படுத்தும் சுழலும் சக்கரத்தைக் கொண்டது. விரல் சக்கரங்கள் இரட்டையாகவே இருக்கும். ஒன்று சுட்டியின் செங்குத்து இயக்கத்தை யும், மற்றொன்று பக்க வாட்டு இயக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

thyristor . தைரிஸ்டர் : மூன்று அல்லது மேற்பட்ட இணைப்புகளைக் கொண்ட இருநிலைச் சாதனம்.

TICCIT : டிக்கிட்: Time shared interactive computer controlled instructional television என்பதன் குறும்பெயர். சிறு கணினிகளையும் மாற்றம் செய்யப் பட்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளையும் ஒரே நேரத்தில் பல மாணவர்களுக்கு தனிப்பட்ட முறை யில் சொல்லித் தருவதற்குப் பயன் படுத்தும் கணினி உதவிடும் கல்வி அமைப்பு.

ticket : நெருக்க உரிமை.

ticket based access control: உரிமை யுடனான நெருக்கக் கட்டுப்பாடு.

ticket list : நெருக்க உரிமைப்பட்டி.

tie breaker : கட்டுப் பிரிப்பி : ஒரே நேரத்தில் இரண்டு செயலாக்க அலகுகள் ஒரே வெளிப்புறச் சாதனத்தினைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது ஏற்படும் மோதலைச் சமாளிக் கும் மின்சுற்று.

tie line : கட்டிய கம்பி : வாடகை தக வல் தொடர்பு வழித்தடம்.

tie mark : கட்டு அடையாளம் : ஒரு அளவில் மதிப்புகளைக் காட்டும் அடையாளம். கண்டறியப்பட்ட எண் மதிப்புகளுக்கிடையில் உள்ள புள்ளிகளைக் காட்ட பயன்படுத்தப் படுகிறது.

tightly coupled : இறுக்கமாக இணைக் கப்பட்ட ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் கணினிகளைப் பற்றியது.

tightly coupled multi processing : இறுக்க இணைவு பன்மைச் செயலாக்கம்.

tilde : டில்டே : அஸ்கி எழுத்து எண் 126(-) சில பெரிய ஆணைத்தொடர்