பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

assembler 67 associa

படுத்தக் கூடிய எந்திர மொழி வடிவத்துக்கு மாற்றுவது.

assembler directive : தொகுப்பு ஆணை: தொகுப்பு மொழி ஆணைத் தொகுப்பில் ஒரு தொகுப்பானுக்குத் தரப்படும் அறிவிக்கை . assembling : தொகுத்தல் : ஒரு குறி யீட்டு ஆதார மொழி ஆணைத் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியக்க நடைமுறை.

assembly : தொகுப்பு; சேர்ப்பு : ஒருங் கிணைந்த மின்சுற்றை கம்பிகளால் இணைத்து ஒரு அமைப்புக்குள் கொண்டு வரும் செயல்.

assembly language : தொகுப்பு மொழி; கூட்டு மொழி: இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாகப் பெயர் குறிப்புகளைப் பயன்படுத்தி, பயனா ளர் ஒருவர், ஆணைத் தொகுப்பை எழுதும் கணினி மொழி.

assembly listing : தொகுப்புப் பட்டியல்: தொகுப்பி ஒன்றினால் தயாரிக் கப்பட்ட அச்சுத் தயாரிப்பு.

assignment statement : மதிப்பிருத்தல் கட்டளை: ஒரு மாறியில் (variable) ஒரு குறிப்பிட்ட மதிப்பினை இருத்தப் பயன்படும் கட்டளை.

assembly unit : சேர்ப்பு அலகு : ஆணைத் தொடர் குறியீட்டில் நகரும் அலகு. எந்த மாற்றமும் செய்யாமல் பல்வேறு ஆணைத் தொடர்களில் அதை ஒருங்கிணைக்கலாம்.

assertion: உறுதிப்படுத்துதல் : மதிப் பீட்டை உண்மையாக்கும் ஒரு பூலி யன் வாக்கியம்.

assign : குறிப்பிடு; குறித்தளி.

Association for Systems Management (ASM) : ஏஎஸ்எம் :அமைவுமேலாண்மை மற்றும் தகவல் செயலாக்கத் துறை யில் விரைவாக ஏற்படும் வளர்ச்சி மாற்றம் ஆகியவற்றை உறுப்பினர் களுக்கு அறிமுகப்படுத்தல் ஆகிய வற்றில் ஈடுபடும் பன்னாட்டுச் சங் கம். 1947இல் இச்சங்கம் உருவாக்கப் பட்டது. அது ஐந்து தொழில் நுணுக் கப்பகுதிகளைக் கொண்டது. தகவல் பரிமாற்றம் தகவல் செயலாக்க மேலாண்மை , தகவல் அமைவு, அமைப்புக்குத் திட்டமிடல் மற்றும் எழுத்து மூலமான தகவல் பரிமாற் றம். உறுப்பினர்கள் இப்பிரிவுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

associative aray: இணைப்பு வரிசை: கணினி பெர்ல் மொழியில் ஒரு தகவல் வகை.

associativecomputer: சார்புக் கணினி : சார்பு நினைவகத்தைக் கொண்ட கணினி.

associative dimensioning : சார்புப் பரிமாணம் அமைத்தல் : பரிமாணப் பொருள்களில் பயனாளர் செய்யும் மாற்றங்களுக்கேற்ப ஆணைத் தொட ரானது தானாகவே பரிமாணப் பொருள்களில் மாற்றம் செய்து கொள்ளும் செயல்முறை.

associative memory: சார்பு நினை வகம் : ஒரு சேமிப்புச்சாதனம். இதன் சேமிப்பு இருப்பிடங்களை அவற் றின் உள்ளடக்கங்களைக் கொண்டே அடையாளம் காண முடிகிறது.

associative storage : சார்பு சேமிப்பு : இதன் நினைவிடங்கள் அதன் உள்ள டக்கத்தினால் அறியப்படுகின்றன. (இது பெரும்பாலான கணினி சேமிப்புகளில் பெயர் அல்லது எண் ணால் நினைவிடத்தைக் குறிப்பிடுவ தற்கு மாறானது). உள்ளடக்க முகவரி