பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transform

689

transistor


ஒரு சாதனத்திலிருந்து வேறு ஒன்றுக்கு எந்த வேகத்தில் நகர்த்தப்படுகிறது என்பது.

transform : உருமாற்று : அதன் பொருளை மாற்றாமல் தகவலின் வடிவத்தை மாற்றுதல்.

transform algorithm : மாற்றல் நெறிமுறை : ஒரு பதிவு விசையில் எண் மதிப்பீடுகளைச் செய்து அதன் முடிவை அந்தப் பதிவேட்டின் முகவரியாகப் பயன்படுத்துவது.

transformation :உருமாற்றம்: கணினி வரைகலையில், ஒரு திரை உருவத் தின் அளவு அல்லது இடத்தின் மீது செய்யப்பட்ட மாற்றல்களில் ஒன்று. மூன்று அடிப்படை மாறுதல்களாக மொழி பெயர்ப்பு, அளவிடல் மற்றும் சுழற்சி ஆகியவற்றைக் கூறலாம்.

transfer time :மாற்றல் நேரம்: ஒரு இடத்திலிருந்து வேறொன்றுக்கு தகவல்களை அனுப்ப எடுக்கும் நேரம். மாற்றலின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் இடையில் உள்ள நேரம்.

transformer : மின்மாற்றி ; உருமாற்றி: கணினி மின்வழங்கலில் 115 வோல்ட்டுகள், 60 ஹெட்சுகள் அதை விடக் குறைந்த ஆனால் கணினி கருவி பயன்படுத்தக் கூடிய பொருத்தமான மின்னழுத்தமாக மாற்றித் தருதல்.

transient : மாறுகின்ற ;நிலையிலா ; மாறுகுணம்: 1. மாற்றத்துக்குப் பிறகு சிறிது நேரம் அப்படியே இருக்கின்ற நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் பற்றி ஆராய்வது. 2. மின்சக்தி அல்லது சமிக்ஞையில் திடீரென்று எழுச்சி ஏற்பட்டு அதனால் தவறான சமிக்ஞையும், பாகங்கள் கோளாறுகளும் ஏற்படுதல்.


transient error : மாறும் பிழை: ஏதாவது ஒருமுறை மட்டுமே ஏற்படுவது போன்ற பிழை. அது மீண்டும் திரும்ப ஏற்படாது.

transient programme : மாறும் ஆணைத்தொடர்; மாறுநிலைசெயல் முறை : கணினி அமைப்பின் முதன்மை நினைவகத்தில் தங்காத ஆணைத் தொடர். தேவைப்படும் போது நாடா அல்லது வட்டிலிருந்து ஆணைத் தொடர்களை கணினி படிக்கும்.

transient state : மாறும் நிலை:ஒரு சாதனம் அதன் முறைகளை மாற்றும் சரியான நேரம். சான்று : 0 முதல் 1-க்கு அல்லது அனுப்புதலில் இருந்து பெறுதலுக்கு.

transient suppressors : மாறும் அழுத்திகள் ; மாறுநிலை ஒடுக்கி : சிறு வோல்டேஜ் பிழைகளை சமா ளிக்கும் சாதனம். நிலையான மின் னோட்டத்தைத் தருகிறது. குறுகிய நேர உயர் வோல்டேஜ் சமயங்களில் கருவிகளை அழுத்திகள் பாதுகாக் கின்றன.

transit symbol : கடவுக்குழுஉக் குறி.

transistor: transistor logic (TTL): மின்மப் பொறி: மின்மத் தருக்க அளவை (டிடிஎல்) : இரு துருவ சாதனங்களின் மூலம் குறைந்த சக்தி களும் அதிவேக அளவை மின் சுற்று களால் உருவாக்கப்படும் ஒருங் கிணைந்த மின்சுற்று அளவை. பொதுவாக குறைந்த சக்தி செக் கோட்டி மின் சுற்றுகள் வேகமாக இயங்கினும் அதிக செலவாகும். ஏனென்றால் தங்கமுலாம் பூசிய செக்கோட்டி டயோடுகள் ஒவ் வொரு டிடிஎல் தட உள்ளிட்டுக்கும் தேவைப்படுகின்றன.


44