பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transmitter

691

tree


அல்லது வேறு ஒரு இடத்திலிருந்து தகவல் பெறு.

transmitter: செய்தி பரப்பும் சாதனம்.

transmission time protection : செலுத்துகாலப் பாதுகாப்பு ; இணை வழியில் பாதுகாப்பு.

transmitting : அனுப்புகின்ற: ஒரு நபரிடமிருந்து வேறொரு நபருக்கோ அல்லது ஒரு கணினியிடமிருந்து வேறொரு கணினிக்கோ தகவல்களை அனுப்பும் செயல்முறை. தொலை வெளிப்புற உறுப்பில் இருந்து கணினிக்கு அனுப்புவது கூட இதில் சேரும்.

transparent: தெரியக்கூடிய: பயனாளர் களுக்கு அல்லது பிற சாதனங்களுக்குப் பார்க்கமுடியாத ஒரு செயல் முறை. பயனாளர் தலையீடின்றி செய்யக்கூடிய கணினி இயக் கத்தைப் பற்றிக் கூறுவதால் இது பயனாளருக்குத் தெரியக் கூடியது.

transponder : செலுத்து அஞ்சலகம்: ஒரு தரை நிலையத்திலிருந்து வரும் சமிக்ஞைகளைப் பெற்று அதை ஒரு பெறும் நிலையத்திற்குப் பிரதிபலிக்கக்கூடிய செயற்கைக்கோளில் உள்ள பெரிதாக்கி.

transportable computer : அனுப்பக்கூடிய கணினி : எடுத்துச் செல்லக் கூடிய சிறிய கணினி. பொதுவாக சுமார் 10 கிலோவுக்குக் குறைவாக எடை உடையது.

transport protocol :போக்குவரத்து நெறிமுறை : இணைப்பு ஏற்படுத்து வதற்கும் எல்லா தகவல்களும் பாது காப்பாக சென்று சேர்ந்து விட்டனவா என்று பார்ப்பதற்குமான தகவல் தொடர்பு விதிமுறை. ஒஎஸ்ஐ மாதிரி யின் 4-வது பகுதியில் இதுவரை யறுக்கப்பட்டுள்ளது.

transpose : இடைமாற்றம் : தகவல் களின் இரு பொருள்களை ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்ளுதல் .

transpose error : இடமாற்றப்பிழை.

transreciver:பெற்றனுப்புச்சாதனம்; பெற்றனுப்பி.

transversal : ஊடு வெட்டுக் கோடு : ஒரு ஆணைத் தொடரில் பிழை நீக்குவதற்காக ஒவ்வொரு சொற்றொடரையும் செயல்படுத்துதல்.

trap : பொறி : தெரிந்த இடத்திற்கு ஆணைத் தொடரின் நிபந்தனையுடன் கூடிய தூண்டுதல். ஆணைத் தொடர்இயக்கப்படும்போது பொறி வைக்கப்பட்டுள்ள இடத்திற்குப் போனவுடன் இதுதானாகவே செயல் படுத்தப்படும்.

trapdoor:பொறிக் கதவு : தகவலைப் பின்னர் பெறலாம் மாற்றலாம் அல்லது அழிக்கலாம் என்ற நோக்கத்தில் ஒரு தகவல் செயலாக்க அமைப்பில் வேண்டுமென்றே உருவாக்கப்படும் பிரிவு.

trapping:பொறிவைத்தல்: ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றும் வழக்கமான ஆணைத்தொடர் ஒட்டத்தில் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளும் வன்பொருள் வசதி.

trash can : கழிவுக் கலம் : கோப்பு களையும், மடிப்புத் தாள்கள் மற்றும் பயன் பாடுகளையும் நீக்குவதற்கும் நெகிழ்வட்டுகளை வெளியேற்று வதற்கும் பயன்படும் மெக்கின் டோஷ் உருப்பொருள்.

TRC: டீஆர்சி:பட்டிதேடுகுறி:Teminal Reference Character என்பதன் குறும்பெயர்.

tree : மரம் : சுழற்சிகள் இல்லாது இணைக்கப்பட்ட வரைபடம். மர