பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

tree dia

692

triple



வரைபடம் என்றும் அழைக்கப்படுகிறது.

tree diagram :மர வரைபடம்.

tree sort : மர வகைப்படுத்தல் : ஒரு மரத்தின் முனைகளாகக் கருதப்படு பவற்றை மாற்றக்கூடிய வகைப் படுத்தும் முறை. ஒருபொருள் வேர் முனையை அடைந்தவுடன், கடைசி இலைமுனையுடன் அது பரிமாற்றிக் கொள்ளப்படுகின்றது.

tree network : மர பிணையம்; மர கட்டமைப்பு : வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின்

மரபிணையம் (Tree network)

தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத் தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பகுதியானது கட்டமைப்பின் அடிப்படைக் கட்டுப்பாட்டினைக் குறிப்பிடுகிறது. டைப்பட்ட கிளைகளில் கீழ்ப் பகுதியில் சில நிலைகளில் கட்டுப் பாடு தரப்படலாம்.

tree structure : மர அமைப்பு : தகவல் களை ஒருங்கமைப்பின் ஒரு வடிவமான வரிசைமுறை வடிவமைப்பிற்கான வேறொரு பொருளின் பெயர்.

trend line : போக்குக்கோடு : தெரிந்த தகவலுக்கு அப்பால் போக்குகளைக் கண்டறிந்துரைப்பதற்காக தகவல் வரிசைகளைக் கணித்து விரிவாக்கல்.

triad : மும்மை.

trichromatic:மூவண்ணத்திறமான: மூவண்ணக் கலவை : கணினி வரை கலையில், மூவண்ணக் கலவை என் பது பொதுவாக மூன்று அடிப்படை நிறங்கள் (சிவப்பு, பச்சை மற்றும் நீலம்) ஒன்றாகச் சேர்ந்து மற்ற நிறங் களை உருவாக்குவதைக் குறிப்பிடு கிறது.

trigger : விசைவில் : ஒரு இயக்கப் பிடியின் மேலுள்ள பொத் தான். ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காக ஏவு கணையைச் சுருக்கி அல் லது ஒரு சங்கடத்தைத் தூண்டுதல் போன்றவற் றைச் செய்ய ஒளிக்காட்சி விளையாட்டுகளில் பயன் படுத்தப்படுவது.

trigonometry கோண வியல்: முக்கோணங் களின் பக்கவாட்டுகள் மற்றும் கோணங்கள் ஆகியவற்றின் உறவுகள் மற்றும் இந்த உறவுகளுக்கான பல்வேறு குறிக் கணக்கியல் முறை பணிகள் ஆகிய வைப் பற்றி ஆராயும் கணிதவியலின் பிரிவு. சரியான முக்கோணத்தில் அடிப்படை உறவுகளை கோண வியல் பணிகள் என்று அழைக்கப் படுகின்றன. பல ஆணைத் தொட ரமைப்பு மொழிகளில் இவை நூலக வாலாயங்களாகக் குறிப்பிடப்படு கின்றன.

triple precision : மூன்று துல்லியம்; மும்மை சரிநுட்பம் : கணினி வழக்க மாகப் பயன்படுத்துகின்ற, ஒரு