பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

turnpike

695

turnkey


 turnpike effect: டர்ன்பைக் விளைவு; வழிமறிப்புத் தடைவிளைவு : தகவல் தொடர்புகளில், அதிக போக்குவரத்து நிலைகள் மற்றும் தடைகளினால் ஏற்படும் நிறுத்தம்.

TTL : டி.டி.எல்: Transister Transistor Logic என்பதன் குறும்பெயர்.

TTY: டி.டீ.ஒய் : Tele Typewriter stainly தன் குறும்பெயர்.

tunnel diode: ஒத்தியைவு இருமுனையம் : அதிவேக கணினி மின்சுற்று அமைப்பு மற்றும் நினைவகங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுச் சாதனம். பில்லியன் நொடிகளின் பின்னங் களாலான பொத்தானிடும் வேகம்.

Turbo Pascal : டர்போ பாஸ்கல்: பெரும்பாலான நுண்கணினி அமைப்புகளில் உள்ள பாஸ்கல் ஆணைத் தொடரமைப்பு மொழியின் புகழ்பெற்ற பதிப்பு.

Turing Alan M. : தூரிங் ஆலன் எம்.(1912-1954) : ஆங்கில கணிதவியாளர் மற்றும் தருக்கவியலார். இறப்பதற்குச் சற்று முன்பு உலகின் முதல் நவீன அதிகவேக எண்முறை கணினி களின் வடிவமைப்பை உருவாக்கியவர்.

Turing machine : தூரிங் எந்திரம்: ஒரு சாதனத்தின் கணித மாதிரியமைப்பு. ஒரு நீண்ட நாடாவின் தற்போதைய நிலையை ஒட்டி அதன் உள்ள மைப்பை மாற்றுதல், எழுதுதல், படித்தல் மற்றும் நகர்த்துதல் ஆகிய வற்றைச் செய்வது. ஆகவே கணினி போன்ற நடத்தையின் முன் மாதிரி ஆனது.

Turing : தூரிங் : 1982இல் ஆர்.சி. ஹோல்ட் மற்றும் ஜே.ஆர்.கார்டி ஆகிய இருவரும் டோரொன்டோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய ஆணைத்தொடரமைப்பு மொழி. பாஸ்கல் ஆணைத்தொடர் மொழியில் உள்ள சில இயலாமைகளை நீக்குவதற்கென்றே இதன் அடிப் படை வடிவமைப்பு இலக்கினைக் கொண்டது. யூனிக்ஸ் இயக்க அமைப்பின் கீழும் இயங்குகிறது.

Turing's test : தூரங்கின் சோதனை : ஒரு கணினியிடம் அறிவுக் கூர்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்ய ஆங்கில கணித வியலாரான ஆலன் தூரிங் உருவாக்கிய சோதனை. இதில் பங்குகொள்பவர்கள் ஒரு மனிதரும் ஒரு கணினியும். பதில் சொல்பவர் களில் யார் மனிதர், யார் கணினி என்பதை மூன்றாவது நபர் கண்டு பிடிப்பார். இந்தச் சோதனையின்படி, தேர்வாளரை கணினி எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதை வைத்து கணினியின் வெற்றியும், அதற்கு ஆதாரமாக அதன் திறமை, அறிவுக் கூர்மையும் கண்டறியப்படும்.

turnaround form : சுற்றித் திரும்பும் படிவம் : அடுத்துவரும் செயலாக்க நிலையின்போது வெளியீட்டுச் சாதனமே உள்ளிட்டு ஊடகமாகப் பயன்படும் நிலைமை.

turnaround time: சுற்றித் திரும்பும் நேரம் : 1. பயனாளரிட மிருந்து கணினி மையத்திற்குப் பய ணம் செய்ய ஒரு வேலைக்கு ஆகும் நேரம். கணினியில் இருந்து சென்று ஆணைத்தொடர் முடிவுகள் பய னாளருக்குத் திரும்ப வருவதும் இதில் கணக்கிடப்படும். 2. தகவல் பரப்புதலுக்கு இடையில் ஆகும் நேரம். 3. அரை டுப்ளே வழித்தடத்தைப் பயன்படுத்தி அனுப்புதல்.

turn key : திறவுகோல் திருப்பு ; சாவி திருப்பு.