பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

turnkey sys

696

twinkle


 turnkey system:முழுப்பணி அமைவு: ஏற்கெனவே தயாரான நிலையில் பயன்படுத்த உதவும் கணினி அமைப்பு. வன்பொருள், மென் பொருள், பயிற்சி, பராமரிப்பு உதவி போன்ற ஒரு பயன்பாட்டுக்குத் தேவையான எல்லாமும் அதில் அடங்கும்.

turn off : நிறுத்தி : ஒரு கணினி அமைப்பை நிறுத்தும் (மின்சக்தி நிறுத்தும்) செயல்.

turn on:துவக்கு: ஒரு கணினிஅமைப் பைத்துவக்கும் (மின்சக்தி துவக்கும்) செயல்.

turtle :ஆமை : திரையில் காட்டப் படும் முக்கோண வடிவ சின்னம். லோகோ மொழியுடன் ஆமை வரைகலையைப் பயன்படுத்துவதன் மூலம் வரைகலையின் கோடுகளின் போக்கைக் கூறலாம். சான்று : தெற்காக நகர்த்து என்ற ஆணை வந்தால் ஆமை திரையின் அடிப்பகுதியை நோக்கி நகரும்.

turtle graphics: ஆமை வரைகல் : லோகோ மற்றும் பிற கணினி மொழி களில் சேர்க்கப்பட்டுள்ள 'ரோபோ வைப் போலச் செய்யும் வரைகலை. சிறுவர்களுக்கு படக் கணிதம் மற்றும் கணினி வரைகலையைக் கற்றுத் தருவதற்குப் பயன்படுவது.

tutorial : பயிற்சி : வன்பொருள் அல்லது மென் பொருள் பயிற்சிக் கையேடு. அச்சிடப்பட்ட ஆவண மாகவோ அல்லது நாடா அல்லது தட்டின் மீது காந்த வடிவில் பதிவு செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்

tutorial programme: பயிற்சி ஆணைத் தொடர்; பயிற்சி செயல்முறை : புதிய பொருளை விளக்கி அதன் பிறகே பயனாளரிடம் வைத்திருக்கக்கூடிய வகையில் விளக்கும் கணினி ஆணைத்தொடர்.

TV: டி.வி;தொலைக்காட்சி :Television என்பதன் குறும்பெயர்.

TVT : டி.வி.டி: Television Typewriter என்பதன் குறும்பெயர். தொலைக் காட்சிப் பெட்டியை கணினி முனை யமாக மாற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசைப்பலகை மற்றும் மின்னணுச் சாதனம். ஒளிக் காட்சி முனையம் (வீடியோ டெர் மினல்) .

TVTerminal: டி.வி.முகப்பு; தொலைக்காட்சி முனையம் : கணினி வெளியீட்டுச் சாதனமாகப் பயன்படும் பொது தொலைக்காட்சிப் பெட்டி.

tweak : நுண் இசைவிப்பு: ஒரு கருவி யின் பகுதியை மேம்படுத்தும் பொருட்டு சரிசெய்தல் அல்லது நன்றாக ஒத்தியயைவு (tune) செய்தல்.

twelve punch : பன்னிரண்டு துளை; ஹோலரித்தின் துளையிட்ட அட்டையில் மேல் வரிசையில் உள்ள துளை.

twinaxial : இரட்டை அச்சு : கோஆக்சியல் போன்ற குழாய். ஆனால், இதில் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு உள்கடத்திகள் இருக்கும்.

twin-cable : இரட்டைக் குழாய்: அதே இரண்டு இடங்களுக்கு இடையில் பல இரண்டு கம்பி இணைப்புகள் வேண்டுமென்றால், உள்ளே பல இரட்டைக் கம்பிகளைக் கொண்ட கேபிள் தரப்படும். இதில் இணையாக கம்பிகள் முறுக்கேறும்.

twinkle box : மின்னும் பெட்டி: ஒளி உணர்கருவிகள், லென்ஸ் மற்றும் சுழல்வட்டு ஆகியவற்றைக் கொண்ட உள்ளிட்டுச் சாதனம். முப்பரிமாண நிலையில் உள்ள ஒளி