பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

twisted

697

type



உமிழ் பொருளை அதன் கோண ஒளி அறியும் திறனைக் கொண்டு கண்டறிய முடியும்.

twisted pair : முறுக்கப்பட்ட இணை 'யுடிபி' (Unshielded Twister pair) assig), அழைக்கப்படும் மெல்லிய (22 முதல் 26 கேஜ்) குறுக்குகளைக் கொண்ட தொலைபேசிக் கம்பிகளில் உள்ள மூடப்பட்ட கம்பி. மற்ற இணைக் கம்பிகளின் குறுக்கீட்டைக் குறைக்க கம்பிகள் ஒன்றோடொன்று முறுக் கப்பட்டிருக்கும். அச்சு இணை (coaxial cable) கம்பிகள் அல்லது ஒளி இழைகளைவிட முறுக்கப்பட்ட கம்பிகளுக்குக் குறைவான பட்டை அகலம் இருக்கும்.

twistedwire: முறுக்கிய கம்பி:தகவல் தொடர்பு ஊடகம். இணைக் கம்பிகளை ஒன்றாக முக்கிய ஒரு கம்பி வடத்துடன் கட்டப்படுவதாகும்.

two address computer: இரு முகவரிக் கணினி :அதன் ஆணை படிவத்தில் இரண்டு முகவரி களைப் பயன்படுத் தும் கணினி. சான்றாக, ADD A+8 ஆணை என்றால் 'A' வின் மதிப்பு களுடன் 'B'ன் மதிப்புகளும் சேரக் கூடும். இது (B) -ன்பழைய மதிப்பை மாற்றுகிறது.

two dimensional : இரு பரிமாணம் (2D) :வரைகலை தகவலை புலனாகும் தன்மைகளுடன் வழங்குவது. உயரம் மற்றும் அகலம் எவ்வளவு என்று இரண்டு பருப்பொருள் தன்மையும் குறிப்பிடப்படும்.

two dimensional array: இரு பரிமாண வரிசை : பத்திகள் மற்றும் வரிசை களைக் கொண்ட ஏற்பாடு.

two pass : இரு முறை கடத்தல் : தகவல்களை இரண்டுமுறை மாற்ற வேண்டியுள்ள ஆணைத்தொடர் அல்லது இலக்கம் பற்றியது. முதல் முறை தகவல் மூலம் செல்லும் போது அதன் நோக்கத்தை ஒரளவே நிறைவேற்றுகிறது. இரண்டாவது முறை தகவலைக் கடக்கும்போது தான் முழுமையாக நிறைவேற்று கிறது.

two's complement: இரண்டின் நிரப்பு எண் : எதிர்மறை எண்களைக் குறிப்படும்முறை. உடன்பாடு அல்லது எதிர்மறை இருமை எண் ஒன்றை எதிர்க் குறியீடாக மாற்ற வேண்டு மானால் எல்லா '0' க்களையும் 1 ஆகவும் எல்லா 1-களையும் 0-வாகவும் மாற்றி பின்னர் 1-ஐக் காட்ட வேண்டும்.

two state devices : இருநிலைச் சாதனங்கள்.

two way branching : இருவழிப் பிரிதல்; இருவழி கிளைத்தல்.

two-wire cable : இரண்டு கம்பி குழாய் : ஒரு கம்பி வடத்தில் உள்ள கடத்திகள் ஒன்றை யொன்று மின் சாரத்தால் தாக்காவண்ணம் பாதுகாக் கப்பட்டுள்ளன. மேலே மூடப்படும் கம்பி மின் பாதுகாப்பு உள்ளது. வெளிப்பக்க உறை பி.வி.சி. என்று அழைக்கப்படுகிறது. மின் தடுப்புச் செய்யப்பட்ட கம்பி வடத்தில் உள்ள இரண்டு கடத்திகளும் கம்பி வடம் நெடுகிலும் முறுக்கப்பட்டு 'இணை' என்று அழைக்கப் படுகின்றது.

two-wire line: இரண்டு கம்பி: வெற்றுக் கடத்திகளைப் பயன்படுத்தி தந்திக் கம்பிகளின் மேல் காப்புறைகளை உருவாக்குதல். குறை மின் சுற்று ஆகி தகவல் தொடர்புத் தடை ஏற்படாமல் இருக்கும் கம்பிகள் ஒன்றையொன்று தொட அனுமதிக் கக் கூடாது.

type : வகை : 1. தகவல் அல்லது சொல் நுழைவில் விசைப்பலகை