பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

universal

703

UPC



universal asynchronous receivers transmitter: யுனிவர்சல் அசிங்க்ரனஸ் ரிசீவர்/டிரான்ஸ்மிட்டர் : தொடர் தகவல்களைப் பெற்று அவற்றை அனுப்புவதற்கான இணை வடிவமாக மாற்றும் ஒருங்கிணைந்த மின் சுற்றுச் சாதனம். இது தலைகீழாக வும் செய்யப்படும்.

universal indentifier : உலக அடையாளம் காட்டி : ஒருவரது அடை யாளத்தை சோதித்தறிவதற்காக ஒரு நபருக்குத் தரப்படும் பல்லுரிமை தர எண்.

universallanguage: உலக மொழி: பல கணினிகளில் கிடைக்கக்கூடிய ஃபோர்ட்ரான், கோபால் மற்றும் பேசிக் போன்ற ஏதாவதொரு ஆணைத் தொடரமைக்கும் மொழி. பொது மொழி போன்றது.

Universal Product Code (UPC): உலக உற்பத்திக் குறியீடு : பேரங்காடித் தொழிலில் உருவாக்கப்படும் கணினி படிக்கக் கூடிய பத்து இலக்க கணினிக் குறியீடு. பொருள் மேலுள்ள வில்லையின் மூலம் உற்பத்தியாளர் களையும், பொருள்களையும் அடையாளம் காண உதவுவது. 10 இலக்கு இலக்கப் பட்டையை அச்சிடுவதற்கான அச்சுப் பொறிகளையும், பேரங்காடியிலிருந்து வெளி யேறும்போது குறியீடுகளை படிப் பதற்கான வருடி ஒளிச்சாதனங்களையும் பலதரப்பட்ட உற்பத்தியாளர் கள் உற்பத்தி செய்கிறார்கள். இதில் 5 இலக்கம் உற்பத்தியாளரை அடையாளம் காணவும், 5 இலக்கம் உற்பத்திக் குறியீட்டு எண்ணாகவும் செயல் படுகிறது.

UNIX:யூனிக்ஸ்:செயல்பாட்டுஆணை; இயக்க அமைப்பு வகையில் ஒன்று : ஏடி&டி பெல் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்ட செயல்பாட்டு அமைப்பு. கணினிகளுக்கு என்று உருவாக்கப்பட்ட இது, பின்னர் நுண்கணினிகளில் ஏற்கப்பட்டது.

unlighted dot: ஒளியூட்டாத புள்ளிக் குறி.

unload: இறக்கு நீக்கு: ஒரு ஆணைத் தொடரை நினைவகத்திலிருந்து நீக்கு வது. நாடா அல்லது வட்டினை அதன் இயக்கியிலிருந்து நீக்குவது.

unmark :அடையாளம் நீக்கல்: ஒரு சொற்பகுதியினை அதன் முக்கியத் துவத்திலிருந்து நீக்குதல், ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நோக் கத்திற்குச் சேர்க்கப்பட்ட ஒன்றின் அடையாளத்தை நீக்குதல்.

unpack :பிரி, அவிழ்: இதற்கு முன்பு கட்டப்பட்ட தகவல்களின் சிறு அலகைத் தனித்தனியாகப் பிரிப்பது.

unpopulated board: பெருக்கப்படாத அட்டை: வாங்குபவரால் கொடுக்கப் படக்கூடிய மின்சுற்று அட்டை.

unset : தனியாக்கு : ஒரு துண்மியின் அல்லது துண்மிகளின் தொகுதியின் மதிப்பை இருமை "0" ஆக மாற்றுதல்.

unsigned : அடையாளமற்ற.

up : மேலே : இயங்கிக் கொண்டிருக் கின்ற கணினி அமைப்பின் நிலை.

up-and-running:மேலேற்றி ஓட்டுதல்; மேலேயும், ஓடுவதும்: சரியாக இயங்கும் ஒரு கணினியைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வேலை செய்யாமல் இருந்து இப்போது நன்றாக இயங்குகிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

UPC : யுபிசி (பொது விளைபொருள் குறிமுறை) : Universal Product Code என்பதன் குறும்பெயர்.