பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

user def

705

user's


 கூறு ஆக அமையும் ஒரு தொகுதி அல்லது குழு ஆணைகள்.

user defined key : பயனாளர் வரையறுக்கும் விசை : கணினி விசைப் பலகையில் உள்ள ஒருவிசை. அதன் பணி முன்பே வரையறுக்கப்படு கிறது அல்லது கணினி இயங்கும் போது ஆணைத் தொடர் மூலம் மாற்றப்படுவது. அந்த விசையை அழுத் தும்போது குறிப்பிட்ட பணி செய்யப்படும்.

user-friendly : பயனாளர் தோழமையான : எளிதாகப் பயன்படுத்துவதற் கேற்ப வடிவமைக்கப்பட்ட மென் பொருள்/வன்பொருள் குறித்துப் பயன்படுத்தப்படும் சொல். சிக்கலான நடைமுறைகளைப் பயனாளர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டி யதில்லை. பட்டறிவு இல்லாத வர்களும் பயன்படுத்த மிக எளிது.

user group :பயனாளர் குழு: ஒரு கணினி அல்லது ஒரு உற்பத்தியாளரின் ஒருவகைக் கணினிகளை பயன்படுத்தி ஆணைத்தொடர்களை அமைப்பவர்கள் தாங்கள் பெற்ற அறிவைப் பங்குகொள்ள அமைத்துக் கொண்ட குழு. தகவல் பரி மாற்றம், ஆணைத்தொடர்கள் மற்றும் வணிகக் கருவிகளைப் பங்கிடல், கணினியின் வன்பொருள், மென்பொருள் மற்றும் செயல்பாடு களைக் குறித்து ஆலோசனையைத் தருதல்/பெறுதல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது. ஒருவர் வாங்க விரும்பும் அல்லது பயன்படுத்த விரும்பும் ஒரு பொருள் பற்றி அதைப் பயன்படுத்தியவரிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம். செய்தி அறிக்கைகளும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.

user interface:பயனாளர் இடைமுகம்; பயனாளர் இடைப்பாடு: பயனாளர் கணினியுடன் சேர்ந்து செயல்பட உதவும் பட்டியல்கள், திரை வடி வமைப்பு, விசைப்பலகை கட்டளை கள், கட்டளைமொழி மற்றும் உதவித் திரைகள் போன்றவை. சுட்டி மற்றும் தொடுதிரை போன்றவையும் இதில் சேரும்.

user interface design : பயனாளர் இடைமுக வடிவமைப்பு : உள்ளீடு/ வெளியீடு முறைகள் மற்றும் மனிதர் படிக்கக்கூடியவற்றுக்கும் எந்திரம் படிக்கக்கூடிய படிவங்களுக்கும் இடையிலானவை உள்ளிட்ட பய னாளர்களுக்கும், கணினி அமைப்பு களுக்கும் இடையிலான இடைச் செயல்களும் வடிவமைப்பும்.

user-defined characters : பயனாளர் வரையறுக்கும் எழுத்துகள்: பயனாளரால் வரையறுக்கப்பட்டு சேமிக்கப்படும் எழுத்துகள்.

user-friendly software : பயனாளர் தோழமை மென்பொருள் :அளவான கணினி பின்னணி கொண்டவர் களும் கற்பதற்கும், பயன்படுத்து வதற்கும் எளிதாக உள்ள ஆணைத் தொடர் மற்றும் அமைப்புகளைக் குறிப்பிட இத்தொடர் பயன்படுத் தப்படுகிறது.

user profile :பயனாளர் குறிப்பு; பயனாளர் விவரம் : ஒரு பாதுகாப்பு அமைப்பின் பகுதியாகப் பயன் படுத்தப்படும் தகவல். சான்றாக, பயனாளரின் வேலை, அறிவுப் பகுதி களின் பணி, அணுகு சலுகைகள் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியவற்றைக் கூறலாம்.

user programms : பயனாளர் செயல் முறை.

user terminal : பயனாளர் முனையம்.

user's manual: பயனாளரின் கையேடு: வன்பொருள் சாதனம், மென்