பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

utility

706

utiliza


 பொருள் உருவாக்கம் அல்லது ஒரு அமைப்பு ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை விளக் கும் ஆவணம்.

utility : பயன்பாடு ; பயன்பாட்டு ஆணைத்தொடர்: ஒரு பயனாளர் பிற ஆணைத் தொடர்கள், ஆணைத் தொடர் மொழிகள், ஆணைத் தொடர் செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை ஓட்ட, மேம்படுத்த, உருவாக்க அல்லது பகுத்தாய உதவும் ஆணைத் தொடர்.

utility function : பயன்பாட்டு பணி வட்டிலிருந்து நாடாவுக்குத் தகவல் களை நகலெடுத்தல் அல்லது கோப்புகளை வகைப்படுத்தல் அல்லது கலத்தல் போன்ற பணிகளைச் செய்யும் பயன்பாட்டு ஆணைத் தொட ரின் பணி.

utility programms : பயன்பாட்டு ஆணைத் தொடர்கள்: பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனிட்டுச் செயல்முறைகள்: ஒரு பட்டியல் ஊட கத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டி லிருந்து நாடா) தகவல்களை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொது வாகத் தேவைப்படும் பணிகளை வழங்கும் கணினி ஆணைத் தொடர்கள். பெரிய கணினி அமைப்புகளை விற்பவர்கள் அவற்றுடன் பலதரப் பட்ட பயன்பாடுகள் மற்றும் பயனா ளர்களுக்குப் பயன்படும் பயன்பாடு களையும் சேர்த்தே விற்பார்கள். நினைவகத் திணிப்பு ஆணைத் தொடர்கள், ஆணைத் தொடர்பிழை நீக்கும் உதவிகள், கோப்பு கையாளும் ஆணைத் தொடர்கள், கணித வாலாயங்கள், வகைப்படுத்தும் ஆணைத்தொடர்கள், சொல் தொகுதி தொகுப்பி கள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம்.

utility routine: பயன்பாட்டு வாலாயம். வகைப்படுத்தல், கலத்தல் போன்ற கணினி அமைப்பின் இயக்கத்திற்கு அடிக்கடி தேவைப் படுகின்ற செயல் முறைகளைச் செய்யப் பயன்படும் மென்பொருள்.

utilization statistics : பயன்பாட்டு புள்ளிவிவரங்கள்: காலத்தை ஒட்டிய கணினியின் செயல்பாடு பற்றிய அளவீடுகள்.