பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

V

707

value


 V : வோல்ட் : மின்கலகுக் கூறு.

VAB : விஏபி:குரல் மறுமொழி வங்கி: 'குரல் மறுமொழி வங்கி என்று பொருள்படும் "Voice Answer Bank" என்பதன் தலைப்பெழுத்து சொல். இது ஒரு தொலைபேசி பிணையத்துடன் ஒரு கணினிப் பொறியமைவை பிணைக்கின்ற ஓர் ஒலி மறுமொழிச் சாதனம். இது தொலைபேசி நாடா முனையங்களிலிருந்து வரும் வினாக் களுக்குக் குரல்மூலம் விடையளிக்கிறது.

vaccine : தடுப்பூசி: தடுப்பு:நோய்த் தடுப்பி : ஒரு கணினி அமைப்பு அல்லது தகவல் வட்டுகளில் உள்ள நச்சு நிரல் (வைரஸ்)களை நீக்கப் பயன்படும் மென்பொருள்.

vaccum chamber : வெற்றிட அறை.

vacuum tube : வெற்றிடக்குழாய்; வெற்றிடக் குழல் : மின்னோட்டம் பாய்வதைக் கட்டுப்படுத்து வதற்கான சாதனம்.மின் பெருக்கி கண்டுபிடிக்கப் படுவதற்குமுன்பு கணினிகளில் காணப்பட்ட தலையாய மின்னியல் சாதனம். வெற்றிடக் குழாயைப் பயன் படுத்தும் கணினிகள், முதல் தலை முறைக் கணினிகள் எனப்படும்.

VAL: விஏஎல் : எந்திரன் இயக்கு மொழி: "Vicarm Arm Language என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, எந்திரமனிதர்களைக் கட்டுப் படுத்துவதற்கான ஒரு கணினி மொழி.

valid octal numbers: முறைப்படியான எட்டிலக்க எண்கள்.

validation : செல்லுபடியாக்கம்; செல்லுபடி சோதனை: ஏற்புடைத் தாக்கல்: உருவமைவு (எண் தோரணிகள், எழுத்திடைவெளி, எழுத்துகள்), வீச்செல்லைகள் (மேல் கீழ் மதிப்பளவு வரம்புகள்), சரிபார்க் கும் எண், ஒரு தலையாய கோப்பி லுள்ள சரிநிகர்ப்பதிவுகள் போன்ற சில வரிகளில் துல்லியத்திற்கான தகவல் ஆய்வு.

value: மதிப்பளவு, மதிப்பு: மதிப்பீடு: ஒரு கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலை எண் அல்லது எண்ணளவு.

value added network : மதிப்புக் கூட்டிய பிணையம் : ஒரு பொது ஊர்தியிலிருந்து செய்தித்தொடர்புக் கம்பிகளைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, அதில் மேம்பாடுகளைச் சேர்த்து அவற்றை மேம்படுத்துகிற பொறியமைவு. இது பிழை கண்டு பிடித்தல், விரைவான மறுமொழி நேரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, பின்னர் அவற்றை மற்றொரு தரப்புக்குக் குத்தகைக்கு விடுகிறது.