பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VDL

98

vendor


 இயக்கிகளை உருவாக்கும் அன்சி (ANSI) தர நிருணய படிவம்.

VDL : விடிஎல் (வியன்னாவரையறை மொழி): வியன்னா வரையறை மொழி எனப்பொருள்படும் Vienna Definition Language" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது சில சமயம் செயல்முறைப்படுத்தும் மொழிகளின் சொற்றொடரியலை வரையறுக்கப் பயன்படுகிறது.

VDT: வி.டி.டி; ஒளித்தோற்றக் காட்சி முனையம் : ஒளித் தோற்றக் காட்சி முனையம் எனப் பொருள்படும் "Video Display Terminal" என்பதன் தலைப்பெழுத்துச்சுருக்கம். இது ஒரு காட்சித் திரையும், ஓர் உட்பாட்டு விசைப்பலகையும் கொண்டுள்ள ஓர் உட்பாட்டு / வெளிப்பாட்டுச் சாதனம். CRT முனையம் என்பதும் இதுவும் ஒன்றே.

VDU: விடியூ (காட்சி அலகு):காட்சி அலகு எனப் பொருள்படும் Visual Display Unit' என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, சில வகைத் திரைகளில் தகவல்களைக் காட்டும் ஒருபுறநிலைச் சாதனம்.

vector :ஏவரை நெறியம் ; ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப்படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதி யின்றி, அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு. 3. கணினியியலில், தனியொரு குறியீட் டின் மூலம் எந்த இனத்தின் அமை விடத்தையும் அனுமதிக்கிற ஒரு தகவல் கட்டமைவு. 4 வரை கலைத் தகவல்களைக் கோடுகளாக வரைந்து காட்டக்கூடிய எதிர்மின் கதிர்க் குழாய். 5 வரை வானில், இரு புள்ளி களை இணைக்கும் ஒரு கோட்டின் கூறு.

vector display :நெறியக் காட்சி; ஏவரைக் காட்சி : திரையில் உருவங் களை வரைவதற்காக எலெக்ட்ரான் கற்றையைக் குறிப்பின்றி நகர்த்துகிற எதிர்மின் கதிர்க்குழாய்.

vector font: நெறிய அச்செழுத்து: கோடுகளால் இணைக்கப்பட்ட புள்ளிகளின் வரிசையினால் உரு வாக்கப்படும் அச்செழுத்து. இதைப் பல்வேறு அளவுகளில் கூட்டி, குறைக்கலாம். plotter fonts' என்றும் அழைக்கப்படும்.

vector graphics : நெறிய வரைகலை: துண்மி விவரணைப் புள்ளிகளாக இல்லாமல் சமன்பாடு வரிசைகளாக இவை வரையப் படும்.துண்மி விவர ணைகள் போல் அல்லாது தர இழப்பு இல்லாமல் அவற்றைப் பெரிதாக்கலாம்.

vector pair : நெறிய இணை; ஏவரை இணை: ஓர் ஏவரையின் எதிர் முனை களாக அமைந்துள்ள தகவல் புள்ளிகள்.

vector processing : சரச் செயலகம்.

vector processor : நெறியச் செயலகம் ' ': ஒரே நேரத்தில் நெறியங்களின் (ஒரு பருமாண வரிசைகள்) மீது பல கணக்கீடுகளைச் செய்கின்ற ஆணைகளுடன் உருவாக்கப்பட்ட கணினி.

vectra : வெக்ட்ரா: எச்.பி. நிறுவனத்தின் பி.சி. வரிசை. தாங்குவனவாகவும், நம்பகத் தன்மையுடையனவாக வும் வெக்டர் இருப்பதைக் காணலாம்.

vendee: வாங்குநர்: வன்பொருள் அல்லது மென்பொருள் பொறியமை வினை வாங்குகிற ஆள் அல்லது வணிக நிறுவனம்.

vendor : விற்குநர் : 1. கணினிப் புற நிலைச் சாதனங்கள், நேரப் பகிர்வுச்