பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

venn

710

vertical



சேவை, கணினிச் சேவைகள் ஆகிய வற்றை விற்பனை செய்கிற நிறுமம் அல்லது வணிக நிறுவனம். 2. ஒரு வாங்குநர் பொருள்களை வாங்கு வதற்கான ஒரு வழங்குநர்.

venn diagram : வென் வரைபடம்: தருக்க முறைத் தொடர்களின் வரை கலை உருவங்களை அளிப்பதற்காக வட்டங்களையும் நீள் வட்டங்களை யும் பயன்படுத்துகிற வரைபடம்.

ventura publisher : வெஞ்சுரா பதிப்பாளர்: பி.சி. மற்றும் மெக்கின் டோஷ்களுக்கான டி.டி.பி ஆணைத் தொடர். ஜெராக்ஸ் நிறுவனமான வெஞ்சுரா மென்பொருள் நிறுவனம் உருவாக்கியது. பெரிய ஆவணங் களுக்கு முழு அளவு பக்க அமைப்பு தருகிறது. மற்ற வரைகலை சொல் செயலாக்க ஆணைத் தொடர்களில் உருவாக்கப்பட்ட தகவல்களை ஏற்பது டாஸ் பதிப்பில் ஜெம் (GEM) இடை முகத்தில் வெஞ்சுரா வருகிறது.

verifier : சரிபார்ப்புச் சாதனம்; சரி பார்ப்பி: விரற்கட்டைத் துளையிடு வதில் ஏற்படும் தவறுகளைக் கண்டு பிடிக்கப் பயன்படும் சாதனம்.

verity :சரிபார் : 1. ஒரு தகவல் செய் முறைபடுத்தும் செயற்பாடு துல்லியமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடித்தல். 2. தகவலின் நேர்மைத் தகவினைச் சரிபார்த்தல்.

version : பதிப்பு : ஒரு குறிப்பிட்ட வன்பொருள் உருமாதிரியின் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் தயாரிப்பு. இரு பொதுவாக ஏறுமுகமாக எண்ணிடப்படும். எடுத்துக்காட்டு: DOS 3.3 என்பது ஒரு வட்டுச் செயற் பாட்டுப் பொறியமைவின் பிந்திய பதிப்பு.

version control:பதிப்புக் கட்டுபாடு: பெரிய மென்பொருள் திட்டத்தில் மூலக்குறியீட்டை மேலாண்மை செய்தல். பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் தகவல் தளத்தை உருவாக்கி அது தொடர்பான ஆணைத் தொடராளர்கள் உருவாக்கும் ஆணைத்தொடரின் மாற்றங்களை கண்காணிக்க உதவுகிறது.

version number : பதிப்பு எண் : ஒரு மென் பொருளின் வெளியீட்டுக்கான அடையாளம். 2.2 மற்றும் 2.3-க்கும் இடையிலான வேறுபாடு மிக அதிக மாகவும் இருக்கலாம். ஏனென்றால் புதிய வெளியீடுகள் புதிய தன்மை களை மட்டும் சேர்க்கவில்லை. தொல்லை தரும் பிழைகளையும் நீக்குகிறது. 3.1 அல்லது 3.11 என்பது முந்தைய பதிப்பில் உள்ள பிழைகளை மட்டும் நீக்கியது. ஆனால் 3.1 மற்றும் 3.2 என்பதில் முந்தைய பொருளை மேம்படுத்தியதாகும்.

verso: வெர்சோ: இடப்பக்கம்:இடது கைப் பக்கம்.

vertex : கோண முனை : 1. ஒரு முக்கோணத்தின் இருபக்கங்களும் இணையும் புள்ளி. 2. ஒரு வரைபடக் கோட்டில் உச்ச அல்லது நீசப் புள்ளி.

vertical justification: செங்குத்தா வரியமைப்பு: மேலிருந்து கீழ்வரையி லான ஒரு முழுப் பக்கத்தின் பத்தி களில் இடத்தைச் சேர்ப்பது அல்லது நீக்குவது பற்றிய செயல்முறை.

vertical recording : செங்குத்தான பதிவு : ஒரு வட்டில் தகவல்களின் காந்தத் துணுக்குகளை, அருகருகே அல்லாமல் செங்குத்தாக அமைக்கும் தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வட்டில் பல கோடி தகவல் எட்டியல் களைச் சேமிக்கலாம்.