பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video ada

712

video gam


 video adaptor : ஒளிக்காட்சி ஏற்பி: ஒரு முகப்பின் கட்டுப்பாட்டு மின் சுற்று. காட்சிக்கான சமிக்ஞைகளை அனுப்புவது இதுவே.

video bandwidth : ஒளிக்காட்சிக் கற்றைஅகலம்.

video board : ஒளிக்காட்சிப் பலகை..

video buffer:ஒளிக்காட்சிஇடைநிலை நினைவகம்: திரையில் காட்டப்படும் தகவலை வைத்துக்கொள்ள நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி. சான்றாக, நிற வரைகலை அட்டை 16 கி. நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. ஒளிக்காட்சி மின்சுற்று இடைநிலை நினைவகத்தின் உள்ளடக்கங்களைப் பிரித்து திரையில் காட்டுகிறது.

video camera:நிகழ்படக்கருவி;ஒளிக்காட்சி படப்பிடிப்புக்கருவி: தொடர்ச் சியான படங்களை எடுத்துக்காட்டு வதற்கோ அல்லது பதிவு செய் வதற்கோ சமிக்ஞைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொரு வரியும் ஒரு முறை நுண்ணாய்வு (ஸ்கேன்) செய்யப் பட்டு சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களைக் கோடுகளிலிருந்து வடி கட்டி மாறும் சமிக்ஞைகளாக அனுப்பப்படுகிறது. பெரும்பாலான ஒளிக்காட்சி படப்பிடிப்புக் கருவிகள் ஒப்புமை (அனலாக்) தான். ஆனால் இலக்க முறை படப்பிடிப்புக் கருவி களும் உளளன.

video card : ஒளிக்காட்சி அட்டை: ஒரு ஒளித்திரைக்கான கட்டுப்பாட்டு இடைமுகம்.

video code : ஒளிக்காட்சிக் குறியீடு : என்.டி.எஸ்.சி ஒளிக்காட்சியை இலக்கக் முறை குறியீடாகவும், தலை கீழாகவும் மாற்றும் மின் சுற்று சுருக்க நுட்பத்தை உள்ளடக்கி தகவல்க ளைக் குறைக்கிறது. முழு இயக்க ஒளிக்காட்சியாக இருக்க லாம் அல்லது இல்லாமற் போகலாம்.

video controller : ஒளிக்காட்சிக் கட்டுப்படுத்தி:சிலவகையான ஒளிக் காட்சிப் பணிகளைக் கட்டுப்படுத்தும் சாதனம்.

video cassette: ஒளிக்காட்சிப்பேழை.

video digitizer : ஒளிக்காட்சி இலக்க மாக்கி: ஓர் ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவியிலிருந்து வரும் சைகை யினை இலக்க வடிவமாக மாற்றி, கணினிச் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கிற உட்பாட்டுச் சாதனம். இந்தச் சைகையினை கணினி மூலம் பகுப்பாய்வு செய்யலாம்; மாற்றமைவு செய்யலாம்.

video disk : ஒளிக்காட்சி வட்டு : ஓர் ஒளிப்படப் பதிவை ஒத்திருக்கிற பிளாஸ்டிக் தகடு. இது, காட்சித் திரையில் தோன்றுகிற காட்சிப் பொருள்களை சேமித்து வைப்பதற்குக் குறைந்த செறிவுள்ள லேசர் கற்றைகளைப் பயன்படுத்து கிறது. ஒரு கணினி மூலம் பல ஒளிக்காட்சி களைக் கட்டுப்படுத்தலாம்.

video display terminal (VDT): ஒளிக்காட்சி முனையம் : ஒரு கணினிப் பொறியமைவில் தகவல்களைப் பதிவு செய்து, அவற்றைத் திரை யில் காட்டுவதற்கான சாதனம். இதில், தகவல் களைப் பதிவு செய்யத் தட்டச்சுப் பொறியில் உள்ளது போன்ற விசைப்பலகை பயன்படுத் தப்படுகிறது.

video game : ஒளிக்காட்சி விளையாட்டு: கணினித் திரையில் வரை கலையாகக் காட்டப்படும் நடவடிக் கையைத் திறமையுடன் கையாண்டு