பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual mem

715

VisiCalc



virtual memory : மெய்நிகர் நினைவகம்.

virtual monitor : மெய்நிகர் கணித்திரை : மெக்கின்டோஷில், எந்த வகையான முகப்பையும் சேர்த்து செயல்படுவது மற்றும் பலவகையான பல்முகப்புகளைப் பயன் படுத்துவது. இரண்டு அல்லது மேற்பட்ட திரைகளில் ஒரே பொருளைக் காட்டுவதும் இதில் அடங்கும்.

virtual peripheral : மெய்நிகர் புறச்சாதனம் : இயக்க அமைப்பினால் செய்து காட்டப்படும் வெளிப்புறச் சாதனம். சான்றாக, வட்டுக்கு அச் சிடும் செயல்முறை.

virtual processing : மெய்நிகர் செயலாக்கம்: ஒவ்வொரு தகவல் பொருளுக் கும் ஒரு செயலகம் இருப்பது போன்று காட்டப் படும் இணைச் செயலக நுட்பம். இருப்பதற்கு மேல் பல மெய்நிகர் செயலகங்கள் தகவல் பொருள்களுக்காக இது உருவாக்கும்.

virtual processor : மெய்நிகர் செயலகம்: மெய்நிகர் செயலாக்க அமைப்பில் உள்ள போலியாக அமைக்கப்பட்ட செயலகம்.

virtual reality : மெய்நிகர் நடப்பு; மெய்த்தோற்ற எதார்த்தம்.

virtual storage : தோற்றநிலைச் சேமிப்பு: மெய்நிகர் சேமிப்பு : ஒரு குறிப்பிட்ட அளவு உள்முகச் சேமிப் பையும், சற்று அதிக அளவு குறைந்த வேகச் சேமிப்பியிலிருந்து உள்முகச் சேமிப்பிக்கு மாற்ற உதவுகிறது. v

irtual storage operating system : மெய்நிகர் நிலைச் சேமிப்புச் செயற்பாட்டுப் பொறியமைவு: ஒரு கணினிப் பொறியமைவின் தோற்ற நிலைச் சேமிப்புத்திறனைப் பயன்படுத்தும் செயற்பாட்டுப் பொறியமைவு.

virtual terminal : மெய்நிகர் முனையம்: அந்நிய கணினியை அணுக அனுமதிக்கும் முனையத்தின் முயற்சி. சிறு அல்லது பெருமுகக் கணினியை பி.சி மூலம் அணுகுவதைக் குறிப் பிடுகிறது.

virus :வைரஸ்; நச்சு நிரல்: இயக்க அமைப்பு மற்றும் தகவல் கோப்புகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் மென்பொருள். ஆணைத்தொடர் எந்திரத்தின் இயக்கத்தைத் தடுக்க வோ அல்லது தகவல்களை அழிக்கவோ இது முயற்சிக்கும். நச்சுநிரல் ஆணைத் தொடர்களைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தெரியவில்லை யென்றாலும் உலகின் பல நாடுகளில் இது துவங்கியது. நச்சு நிரல்கள் தங்களைப் பெருக்கிக் கொள்ளக் கூடியவை. ஒரு நிறுவனத்தின் கணினி அமைப்பு முழுவதும் வேகமாகப் பரவும். நச்சு நிரலால் பாதிக்கப்பட்ட ஒரு வட்டை வேறொரு கணினியில் பயன்படுத்து வது போன்று வேண்டு மென்றே நச்சு நிரல் சேர்க்கலாம். நல்ல வேளையாக நச்சுநிரல் தடுப்பு மென்பொருள் தற்போது பரவலாகக் கிடைப்பதால் இதை ஒரளவு கட்டுப்படுத்தலாம்.

VLSI : விஎல்எஸ்ஐ : மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு என்று பொருள்படும் Very Large Scale Integration என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

VisiCalc : விசிக்கால்க் (மின்னணு விரிதாள் நிரல்) : பிரபலமான மின்னணு விரிதாள் செயல்முறை. ஒரு திரையில் தகவல்களை மின்னணுத் தாளாக அல்லது இணைப்பு அமை விடங்களாகக் காட்டுகிறது. இணைப்பில் மாறியல் மதிப்புருக்