பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vision

716

voice


 களின் அமைவிடங்களுக்கு ஒரு பிரிவினையைப் பயன்பாட்டாளர் பயன்படுத்துகிறார்.

vision recognition : காட்சி அடையாளம்; பார்த்தறிதல் : கணினி மூலம் படத்தகவல் களைச் செய்முறைப் படுத்தும் முறை. எடுத்துக்காட்டாக: கணினியிலுள்ள செயற்கை அறிவுத் திறன், ஒரு குதிரையின் தொலைக் காட்சி உருக்காட்சியை அடையாளங் கண்டு கொண்டு, அது குதிரை என்று கூறுகிறது. உருக்காட்சிகளை அடையாளங்காண்பது, எந்திரங்களுக்கு மிகச் சிக்கலான செய்முறை.

visual : புலனாதல்: ஒரு ஒளிப்படம், வரைபடம், ஓவியம், பட்டியல் அல்லது வரைகலையைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு கொள்ளுதல்.

visual basic : விசுவல் பேசிக்; விண்டோஸ் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் குவிக் பேசிக்கின் மேம்பட்ட பதிவு. விசுவல் பேசிக் கருவிப் பெட்டியில் இருந்து பயன்பாடுகளுக்குப் பொருள்களை இழுத்து வருவதன் மூலம் விண்டோஸ் பணித் தொகுப்பு கள் உருவாக்கப்படுகின்றன.

visual display :காட்சித்திரை : ஒரு காட்சித் திரையில் படம் அல்லது வரைபடம் காட்டுதல் அல்லது ஒரு வரைவி மூலம் ஒரு வரைபடம் உரு வாக்கிக் காட்டுதல் போன்று தகவல் களைக் காட்சியாக உருவாக்கிக் காட்டுதல்.

visual display terminal : புலன் காட்சி முனையம்: திரையில் விசையிடப் பட்ட உள்ளீடு மற்றும் செயலக வெளியீட்டைக் காட்டும் திறனுள்ள சாதனம.

visualization : பார்க்கும் பொருளாக்கல்: கணினி வரைகலையில், எண் வடிவில் விளங்கிக் கொள்ள கடின மாக உள்ள போக்குகளை மனிதர்கள் கண்டுகொள்ள அனுமதிக்க எண் முறை தகவல்களை படவடிவமாக மாற்றுதல். கொள்கையளவிலும், நடைமுறையில் ஆராய்ச்சி சூழ் நிலைகளிலும் இது குறிப்பாக பயன் படுத்தப்படுகிறது.

visual page : காட்சிப் பக்கம்; காணும் பக்கம்: ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட சேமித்துவைக்கப்பட்ட திரைக்காட்சிக் கோப்புகள் அடங்கிய காட்சி உருவரை.

visual scanner : காட்சி வருடி.

visual table of contents: காணும் உள்ளடக்கப் பட்டியல் : ஒரு நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆணைத் தொடரிலோ தகவல் ஓட்டத்தின் விளக்கங்களை வரைகலை வடிவில் காட்டும் ஒரு வரைபடம். வரைபடத்தின் மேற் பகுதியில் காட்டுவதைவிட அடிப்பகுதியில் அதிகமான தகவல்கள் காட்டப்படும். VTC என்று சுருக்கப்படும்.

vocabulary : சொற்களஞ்சியம்; சொல் வளம்: ஒரு குறிப்பிட்ட கணினிக்காக ஒரு செயல் முறையை எழுதுவதற்குப் பயன்படுத்தப் படும் குறியீடுகள் அல்லது ஆணைகள்.

voder: ஓடர்: பேச்சு ஒருங்கிணைப்பி.

voder-speech synthesizer : பேச்சுருவாக்கியின் பெயர்.

voice channel : குரல்வழித் தடம் : மனிதக் குரலைக் கொண்டு செல்லும் துணை வழித்தடம் அல்லது ஒளிபரப்பு வழித்தடம்.

voice coil : குரல் சுருளை: வேகமாக அணுகவும் நிலை வட்டு இயக்கி படி/எழுது முனை நுட்பம். வழக்க