பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

attention 70 audiotex

வுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் சேர்ந்து செயல் பட்டு கணினி அமைப்பின் மென் பொருள் மற்றும் வெளிப்புறச் சாதனங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

attention key : கவன விசை : கணினி முனையத்தில் உள்ள ஒரு பணி விசை. அப்போது செய்து கொண் டிருக்கிற வேலையில் தடையிடு மாறு, கணினிக்கு இது சமிக்ஞை அளிக்கும்.

attenuation : தேய்தல் : சமிக்ஞை ஒன்றின் அளவு அது கட்டுப்பாட்டு அமைவு வழியாகச் செல்லும் பொழுது குறைதல்.

attrib : அட்ரிப் : டாஸ் ஆணைகளில் ஒன்று. ஒரு கோப்பின் ஏற்பியை மாற்றுவது.

attribute : ஏற்பி : 1.மாறி ஒன்றைக் கணினிகையாளும் முறை. 2. தகவல் மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தகவல் அமைவு ஒன்றின் அடிப்படை அலகு அமைப்பு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு.

attribute byte : ஏற்பி எண்துண்மி ; ஏற்பி எட்டியல் : வட்டுக் கோப்பில் உள்ள சேமிக்கப்பட்ட தகவலைக் குறிப்பது. அக்கோப்பில் உள்ள ஏற்பிகளை இது குறிப்பிடுகிறது.

audio: கேட்பொலி : மனிதரால் கேட்கக் கூடிய ஒலி.

audio board : கேட்பொலி அட்டை : தனிநபர் கணினி விரிவாக்க அட்டை. ஒலியை உருவாக்கி வெளியில் உள்ள சிறிய ஒலிபெருக்கிகளுக்காக அதைப் பெரிதாக்கித்தருகிறது. ஒலி அட்டை (sound card) என்றே பெரிதும் அழைக்கப்படும்.

audio data : கேட்பொலி தகவல் : ஒலியை இலக்கமாக்கியபின் வெளிப்படும் தகவல்.

audio device : கேட்பொலிக் கருவி : ஒலியை ஏற்கும் அல்லது உருவாக் கும் கணினிக் கருவி.

audio input : ஒலி உள்ளீடு : ஒரு கணினியில் தகவலை உள்ளீடு செய்ய ஒலியைப் பயன்படுத்துவது.

audio response output: ஒலி பதில் தரும் வெளியீடு : ஒலியாக அல்லது பேசும் மொழியாக கணினியின் வெளியீடு.

audio response unit : கேட்பொலி ஒலி தரும் பகுதி : பேசும் சொல்லாக வெளியீடு தருகின்ற கணினியின் வெளியீட்டுச் சாதனம்.

audio signal : ஒலி சமிக்ஞை : ஒலி அலைகளைப் பெரிதாக்கி மின் வடிவில் தருவது.

audio sphere : ஒலிப்புலம் : மாய மெய்த் தோற்றச் சூழ்நிலையில் பயன் படுத்துபவரின் இருப்பிடம் மற்றும் ஒலி தோன்றுமிடத்திற்கேற்ப ஒலியை முப்பரிமாணமுறையில் குறிப்பிடும் அமைப்பு.

audio output : ஒலி வெளியீடு : மனிதக் குரல் போன்ற ஒலிச் சமிக் ஞைகளை உருவாக்கக்கூடிய ஒலிப் படைப்பிகளினால் உருவாக்கப் படும் கணினி வெளியீடு.

audio response device : ஒலி எதிர் வினைக்கருவி : பேசப்படும் குரல் போன்ற எதிர்விளைவை உருவாக் கும் வெளியீட்டுக் கருவி. ஒலி வெளி யீடு என்பதைப் பார்க்கவும்.

audiatex : ஆடியோடெக்ஸ் : தொலை பேசி தகவலை அனுப்பவும் பெற வும் அனுமதிக்கும் ஒலி முறையில் பதில் தரும் பயன்பாடு, குரல் வேண்டுகோள்களுக்கேற்ப, பயன்