பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

voltage

719

vulnera


 voltage regulator : மின்னழுத்த முறைப்படுத்தி: வெளிப்பாட்டுமின் னழுத்தத்தை முன் தீர்மானித்த ஓர் அளவில் வைத்திருக்கிற அல்லது முந்தையத் தீர்மானத்தின்படி மாற்று

மின்னழுத்த முறைப்படுத்தி (Voltage regulator)

கிற மின்சுற்றுவழி. இயல்பான உட்பாட்டு மின்னழுத்த மாறுதல் எவ்வாறிருந்தாலும் இந்த மாற்றம் நடைபெறுகிறது.

volume table of contents : வட்டு உள்ளடக்கங்கள் :ஆப்பிள் டாசின் கீழ் நிலை வட்டுகளுக்கான கோப்பு ஒதுக்கும் பட்டியல்.

Von Neumann, John (1903-1957) : வான் நியூமன், ஜான் (1903-1957) : இந்நூற்றா ண்டின் தலைசிறந்த கணித மேதைகளில் ஒருவர். முதலாவது மின்னணுக் கணினிகளில் ஒன்றை உருவாக்கியவர். இவர் சேமிப்புச் செயல்முறைக் கோட்பாட்டையும், விளையாட்டுக் கோட்பாட்டையும் உருவாக்கினார்.

von neumann bottleneck : வான் நியூமன் முட்டுக்கட்டை: வான் நியூமன் எந்திரத்தின் வேகத்தடைக்கான காரணங்களைக் குறிப்பிடு கிறது. அவை: 1. ஒரே வழித்தடத்தில் உள்ள மின்சுற்றுகள் அடிப்படை சேமிப்பகத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு ஆணைகளை எடுத்துச் செல்கின்றன. 2. ஒரே தகவல் பாதையில் அடிப்படை சேமிப்பகத்திற்கும், கணித தருக்கப் பிரிவுக்கும் மின்சுற்று கள் செயல்படுகின்றன.

von neumann machine : வான் நியூமன் எந்திரம்: வான் நியூமன் 1945இல் ஓர் அறிக்கையில் இந்த எந்திரம் பற்றி விவரித் துள்ளார். இது, ஒரு மின்னணுக் கணிப்புச் சாதனத்தின் தருக்க முறை வடிவமைப்பாகும். சேமிப்புச் செயல்முறைக் கோட்பாடு இந்த எந்திரன் சிறப்புக் கூறாகும்.

VPS :விபிஎஸ்: "Vector Per Second' என்பதன் குறும்பெயர். நெறியம் (Vector) அல்லது வரிசை செயலகத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத் தப்படுவது.

VRC : விஆர்சி : 'செங்குத்து மிகைச் சரிபார்ப்பு என்று பொருள்படும் Vertical Redundancy Check என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

VS : விஎஸ் : "தோற்றநிலைச் சேமிப் பகம்' என்று பொருள்படும் 'Virtual Storage' என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

vulnerability :வடுப்படும்நிலை: பாது காப்பு இடர்ப்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடியதாக ஒரு கணினியிலுள்ள பலவீனம்.