பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wafer

720

warm


W

wafer : மென்தகட்டுச் சிப்பு; சீவல் : மூன்று அல்லது நான்கு அங்குலம் கணமுடைய வட்ட வடிவ தகடு. இதில் பல ஒருங்கிணைந்த மின் சுற்று வழிகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் தனித்தனிச் சிப்புகளாகப் பகுக்கப் படுகின்றன.

wafer processing : மென்தகடு செயலாக்கம் : மெல்லிய தகடுகளாலான அரைக் கடத்திப் பொருளைச் செயலாக்கம் செய்து மின்சுற்றுகளை உருவாக்குவது. செயலாக்கத்திற்குப் பின் தகட்டினை வார்ப்புரு படிவம் (die) அல்லது சிப்புகள் என்று தனியாக்கப்படும்.

wafer sort : தகடு பிரிப்பு : ஒருமென் தகட்டில் எந்த டைஸ் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதைச் சோதித் தறிதல்.

wait : காத்திரு : ஒரு டிபேஸ் கட்டளை. பயனாளர் விசையை அழுத்தினால் ஒழிய ஆணைத்தொடர் இயக்கப்படுவது தள்ளிப்போகச் செய்வது. அதன் விளைவான விசைப்பதிவை குறிப்பிட்ட மாறியில் எழுத்துச் சரமாக சேமிக்கப்படுகிறது.

wait state : காத்திருப்பு நிலை , காத் திருக்கும் நிலை : மையச் செயலகம் ஆணைகளை நிறைவேற்றாமல், வாளாதிருக்கும் நிலை.

wait time : காத்திருப்பு நேரம் : மற்ற நடவடிக்கைகள் முடிவுறுவதற்காகக் காத்திருக்கும் ஒரு செயல் முறை அல்லது கணினி.

wall paper : சுவர் தாள் : சாளரச் (window) சொல்: சாளரத்துக்குப் பின் னுள்ள அமைப்பைக் குறிப்பிடுவது.

walkthrough: உலா; ஊடுநடை; உலா வருதல்.

WAMI : வாமி : உலக மருத்துவ தகவலியல் சங்கம் என்று பொருள்படும் World Association for Medical Informatics என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

WAN : வான்; விரிபரப்புப் பிணையம்: "Wide Area Net Work" என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்.

wand : ஒளிக்கோல் , மாத்திரைக் கோல் : குறியீட்டுத் திரைச் சீட்டுகள், பட்டடைக் குறியீடு கள், எழுத்துகள் ஆகியவற்றைப் படிக்கவும் அடை யாளங்காணவும் கூடிய கைப்பிடி ஒளியியல் சாதனம்.

Wang Labor Tories : வேங் லேபர் டோரிஸ் : அமெரிக்காவில் கணினிகளை உற்பத்தி செய்யும் புகழ்பெற்ற ஒரு நிறுவனம்.

wang writer :வேங் ரைட்டர் : வேங் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்ட சொல் செயலாக்கத் தொகுப்புகளில் ஒன்று.

wangnet ; வேங்நெட் : வேங் நிறு வனத்தின் அகலத் தகவல் தொடர்பு வழித்தடம் கொண்ட குறும்பரப்புப் பிணையம் (LAN) . இது தகவல்கள்,குரல் மற்றும் ஒளியையும் கையாள் கிறது.

warm boot : இதமான உயிரூட்டம்; உடன் தொடங்கல்: கணினியில் மின் விசை ஒடிக்கொண்டிருக்கும் போதும், மின்விசை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கணினி கருதும்படி செய்து, மீண்டும் உயிரூட்டும் செயல் முறை.

warm link :இதமான இணைப்பு : இரண்டு தகவல் கோப்புகளுக்கு இடையிலான மென் பொருள் இணைப்பு. ஒரு கோப்பு புதுப்பிக்கப் படும்போது மற்றொன்றும் (தானாகவே) புதுப்பிக்கப்படும்.