பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

white spa

723

Winches



white space character:வெள்ளை இட எழுத்து: திரையில் தோன்ற வேண்டி யிராத எழுத்து. சான்றாக, இடைவெளி, டேப், வரி திரும்புதல் போன்றவை. இந்த எழுத்துகளைப் பார்க்கவோ அல்லது பார்க்காமல் இருக்கவோ பல சொல் செயலகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

whole number : முழு எண் : பின்னப் பகுதிகள் இல்லாத நேர். எடுத்துக் காட்டு: 84 அல்லது 22.0 அல்லது 0.

wide area network : நாடளாவிய கணினி பிணையம்; விரிபரப்பு பிணையம் : பல்லாயிரம் மைல் வட்டாரத் திற்குச் சேவை புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் செய்தித் தொடர்பு பிணையம்.

Wide Area Telephone Service (WATS) : விரிபரப்பு தொலைபேசி சேவை : வாட்ஸ் தொடர்பு எனப் படும் அணுகு இணைப்பு மூலம், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் தகவல் தொடர்பு கொள்வதற்கு வாடிக்கை யாளரை அனுமதிக்கிற தொலை பேசி நிறுமங்கள் வழங்கும் சேவை. அமெரிக்கா ஆறு "வாட்ஸ்" மண்ட லங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் மாதக் கட்டணம் செலுத்தி இந்த வசதியை பயன் படுத்தலாம்.

wideband:அகல்அலைவரிசை; அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக்கட்டளை. தகவல் தொடர்பு களில், குரல்வகை அலைவரிசையை விட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை.

widow:துணையிலி: ஒரு வாசகப் பக் கத்தின் உச்சியில் தன்னந்தனியாக இருக்கும் ஒருபத்தியின் கடைசிவரி. எல்லா வகை அச்சடிப்பிலும் இது விரும்பத்தகாதது எனக் கருதப் படுகிறது.

widow & orphan :துணையிலியும் அனாதையும் : அடுத்தபக்கத்தின் மேற்பகுதியில் தோன்றுகின்ற ஒரு பத்தியின் கடைசி வரியை துணையிலி (window) என்றும், ஒரு பக்கத்தின் கடைசிவரியில் வரும் ஒரு பத்தியின் முதல் வரியை அனாதை (orphan) என்றும் கூறுகிறோம்.

width of field:புல அகற்சி.

wiener : வைனர்: நெர்பெர்ட் (18941964) : அமெரிக்க அறிவியலாளர். கணினியியல் எனப் பொருள்படும் cybernetics என்ற சொல்லைப் புனைந்து ஒரு புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர். மனித மூளையின் பல சிந்தனைச் செய் முறைகளைக் கணிதமுறையில் தீர் மானித்து, கணினிகளில் பயன்படுத் தலாம் எனக் கருதியவர். தானியக்கக் கோட்பாட்டின் முன்னோடி.

wild card : வரம்பிகந்த அட்டை;வரம்பிலா உரு : ஒரு செயற்பாட்டுப் பொறியமைவு ஆணையில் செருகப் படும் ஓர் எழுத்து. இது, பல்வேறு பொருள்படுவதாகக் கூறப்படும். இது கோப்புகளுக்குப் பெயரிடும் முறை.

Wilkes Maurice Vincent : வில்கஸ் மாரிஸ் வின்சென்ட் : கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மின்னணு சேமிப்புத்தானியங்கிக் கணிப்பியை 1949இல் உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்தவர்.

winchester disks : வின்செஸ்டர் வட்டுகள்.

winchester disk drive :வின்செஸ்டர் வட்டு இயக்கி : அதிவேகத்துணை நிலைச் சேமிப்புச் சாதனம். இது ஒரு