பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

word pro

726

Wordstar


 word processing centre : சொல் தொகுப்பி ; செய்முறைப்படுத்தும் மையம் : சொல் செய்முறைப்படுத்தும் சாதனங்களையும், ஓர் அமை வனத்திற்கு எழுதிய செய்திகளைத் தயாரிப்பதற்குரிய வசதிகளையும் உடைய ஒரு மையம்.

word processing machine : சொல் செயலாக்க எந்திரம் : சொல் செயலாக்கப் பணிகளுக்கு மட்டுமே சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி.

word processing operator : சொல் செய்முறைப்படுத்தும் இயக்குநர் : சொல் செய்முறைப்படுத்தும் சாதனத்தை இயக்குகிற ஆள்.

word processing package : சொல் செயலாக்கத் தொகுப்பு: சொல் செய லாக்கப்பணிகளைச் செய்யும் மென் பொருள்.

word processing programme: சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறை : வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப் பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறியமைவுக்கு வழிகாட்டுகிற மென்பொருள். இதுவும் சொல் செய் முறைப்படுத்தி என்பதும் ஒன்றே.

word processing society (WPS) : சொல் செய்முறைப்படுத்தும் கழகம் : சொல் செய்முறைப்படுத்துவதை ஒரு தொழிலாக வளர்ப்பதற்காகப் பள்ளிகளில் சொல் செய்முறைப் படுத்தும் கல்விச் செயல்முறைகளை ஊக்குவிக்கிற அமைவனம்.

word processing system : சொல் செய்முறைப் படுத்தும்பொறியமைவு:தானி யங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகிய வற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

word processor:சொல் செய்முறைப் படுத்தி: சொல் செயலி; சொல் தொகுப்பி : வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்று வதற்கு பயன்படுத்தலாம். ஆவணங்கள் அச்சடிக்க்வும் பயன்படுகிறது.

word publishing: சொல் பதிப்பித்தல்: கலத்தல், காட்டுதல் மற்றும் சொல்வரைகலை அச்சிடல் போன்ற டி.டி.பி தன்மைகளை வழங்கும் சொல் செயலாக்கம்.

word separator: சொல் பிரிப்பி: ஒரு சொல்லைப் பிரிக்கின்ற ஒரு அமைப்பு-வெற்றிடம், காற்புள்ளி, புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றன.

Wordperfect : வேர்டுபர்ஃபெக்ட்: கோரல் நிறுவனம் வழங்குகின்ற முழுநீள சொல் செயலாக்கத்தில் அனைத்துத் தன்மைகளும் கொண்ட ஆணைத் தொடர். 1980இல் அறி முகப்படுத்தப்பட்ட இது - ஐ.பி.எம் ஆப்பிள் II, மெக்கின்டோஷ், அமீகா, அட்டாசி போன்ற தனிநபர் கணினி களில் பயன்படுகிறது. பதிப்பு 5.0 இல்... முன்பார்வை முறையும், பதிப்பு 6.0இல் வரைகலை முறையும் ஹையேர் டெக்ஸ்ட் ஆவணங் களை உருவாக்கும் திறனும் பெற் றுள்ளது.

Wordstar:வேர்டுஸ்டார்: பெரும்பாலான நுண்கணினிப் பொறியமைவு களில் உள்ள புகழ்பெற்ற சொல் செய் முறைப்படுத்தி. மைக்ரோ புரோ நிறுவனத்தின் தயாரிப்பு.