பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

audiovisual 71 authoriza

படுத்துபவர்கள் விசையை அழுத்தி யோ அல்லது கேள்விகளுக்குப்பதில் கூறியோ தங்களது வழியை பல வாய்ப்புகளுக்கிடையில் தேர்ந் தெடுப்பார்கள். நிதி தொடர்பான தக வல்களை அறியவும் பொருள்கள் வாங்க ஆணை தரவும் பயன்படு கிறது. தகவல் தளங்களை மாற்ற வசதியாக இடைப்பரிமாற்ற அமைப்புகளில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

audiovisual: ஒலி ஒளி: நாடாப்பேழை களுடன் தொடர்புடையது. இவை தகவலை ஒலி மூலமும் ஒளியின் மூலமும் பதிவு செய்கின்றன.

audit : தணிக்கை : கணினி இயக்கங் களின் திறனை முடிவு செய்ய, அமைப்புகள், ஆணைத் தொட ரமைத்தல் மற்றும் தகவல் மைய நடை முறைகளைச் சோதித்தல்.

audit software : தணிக்கை மென் பொருள் : தகவல் தளங்களிலிருந்து மாதிரிகளை எடுப்பது மற்றும் உறுதி செய்யும் கடிதங்களை வாடிக்கை யாளர்களுக்கு அனுப்புவது போன்ற பல தணிக்கைப் பணிகளைச் செய் யும் சிறப்பு ஆணைத் தொடர்கள்.

audit trail: தணிக்கைச் சோதனை: தணிக்கைத் தடம் : ஊடகங்களைக் கொண்டு தகவல் செயலாக்கத்தின் அனைத்து நிலைகளையும் தேடுதல். மூல ஆவணத்தில் அது இடம் பெறு வதில் துவங்கி இறுதி ஆவணமாக வெளிவரும் வரை அனைத்துச் சோதனைகளும் செய்யப்படும்.

authentication : அங்கீகாரமளித்தல் : ஒரு சிறு தகவல் சரிதானா என்பதைச் சோதித்துப் பார்க்கும் செயல்முறை.

authenticity : நம்பகப்பண்பு : தகவல் ஒன்றின் நம்பகத் தன்மை.

author : ஆசிரியர் : கணினி வழிக் கற்றலுக்குப் பாடப்பொருளை உரு வாக்குபவர்.

authoring system : ஆசிரிய அமைவு: ஆசிரிய மொழி ஒன்றினை செயல் படுத்தும் திறன் கொண்ட கணினி அமைவு.

authoringsystemstandard : அமைப்பு தரத்தை எழுதுதல் : எழுதும் ஆணைத் தொடரைச் செயல்படுத்தும் திற னுள்ள கணினி அமைப்பு, கற்றுக் கொள்ளவும், சிபிடி ஆணைத் தொடர் அமைக்கவும் அனுமதிக்கும் மென்பொருள்.

authoring tool: எழுதித்தரும் கருவி : பல் ஊடகப் பொருளை உருவாக்க உதவும் ஆணைத் தொடர். பல் ஊட கம் வழங்குதற்குரிய தேவையான சூழ்நிலையையும் அது உருவாக்கித் தரும்.

authorization :ஏற்பளித்தல்; அங்கீ காரம் அளித்தல் : செயலாக்கம் நடை பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத்தன்மை.

authorization code :ஏற்புக் குறியீடு; அங்கீகாரக் குறியீடு : கணினி அமைப்பை அணுக அனுமதிக்கும் நுழைவுச்சொல் அல்லது அடையாள எண்.

authorization distribution list : ஏற் பளிக்கப்பட்ட விநியோகப் பட்டியல்; அங்கீகரிக்கப்பட்ட விநியோகப் பட் டியல் : குறிப்பிட்ட அறிக்கைகளின் அங்கீகரிக்கப்பட்ட பயனாளரின் பட்டியல். தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதிகள் விநியோகிக்கு மாறு கட்டுப்படுத்த உதவுகிறது.

authorization programme: ஏற்கப் பட்ட ஆணைத்தொடர்;அங்கீகரிக்கப் பட்ட ஆணைத் தொடர் : ஒரு கணினி