பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X axi

730

X win




X

X axis : எக்ஸ்-அச்சு : ஓர் ஆயத் தொலைவுத் தளத்தில், கிடைமட்ட அச்சு. இது ஒய் அச்சு, இசட்-அச்சு என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

x-acto knife : எக்ஸ்-ஆக்டோ கத்தி : ஒட்டும் சமயத்தில் வெட்டவும், நகலெடுக்கவும், படங்களை ஒட்டவும் பயன்படும் கருவி.

x-address : எக்ஸ்-முகவரி: நினைவ கத்தின் சரியான வரிசை குறிப்பிடப் படும் ஒருங்கிணைப்பு.

Xbase : எக்ஸ்பேஸ் : கிளிப்பர், ஃபாக்ஸ்புரோ போன்ற டிபேசை ஒத்த மொழிகள். ஆரம்பத்தில் டிபேசைப் போன்றதாகவே இருந்தா லும், புதிய கட்டளைகளும், தன்மை களும் இதை டிபேசுக்கு ஏற்றவையாக ஓரளவே ஆக்கி உள்ளன.

Xcopy : எக்ஸ் காப்பி : கோப்புகளையும், துணை விவரத் தொகுப்புகளையும் நகலெடுக் கின்ற டாஸ் மற்றும் ஒஎஸ்/2 பயன்பாடு.

X-datum line : எக்ஸ் விவர-வரி : துளையிட்ட அட்டையில் மேல் மூலையின் ஒரத்தில் உள்ளதாகப் பயன்படும் ஒரு கற்பனைக்கோடு. சான்றாக, ஹொலரித்தின் 12 துளை வரிசை ஓரத்தின் அருகே உள்ள கோடு.

XENIX : ஜெனிக்ஸ் : இது, யூனிக்ஸ் என்ற செயற்பாட்டுப் பொறிய மைவின் ஒரு திருத்திய பதிப்பு. இதனை நுண்கணினிகளில் பயன் படுத்துவதற்கு மைக்ரோ சாஃப்ட் கழகம் தயாரித்துள்ளது.

xerographic printer : மின்துகள் ஒளிப்பட அச்சுப்பொறி: காகிதத்தில் ஓர் ஒளியியல் உருக்காட்சியை அச்சடிப்பதற்கான சாதனம். இதில், காகிதத்தில் மின்நிலைப்பாட்டு முறைப்படி மின்னேற்றம் செய்யப் பட்டுள்ள பகுதிகளை ஒளி மற்றும் இருள் பகுதிகள் குறிக்கின்றன. காகிதத்தில் ஒரு பொடித்தமைத் துகளைப் பூசும் பொழுது மின்னேறிய பகுதிகளில் அந்தப் பொடி ஒட்டிக் கொள்கிறது. ஒட்டிய பொடியை வெப்பமூட்டுதல் மூலம் காகிதத்தில் உருகச் செய்யப்படுகிறது.

x-height : எக்ஸ்-உயரம் : ஏற்றம் அல்லது இறக்கம் இல்லாத சிறிய எழுத்தின் உயரம். தேர்ந்தெடுக்கப் பட்ட அச்செழுத்தில் எக்ஸ் எழுத் தின் உயரத்திற்குச் சமமானது.

XOR: எக்சோர் (விலக்கும் அல்லது): "Exclusive OR" என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

x protocol : எக்ஸ் விண்டோ அமைப்பின் நெறிமுறை.

X-punch: எக்ஸ்-துளை : ஒரு ஹொலரித் அட்டையில் 11 ஆவது துளையிடும் நிலையில் துளையிடுதல். இதனை 11ஆம் துளை என்றும் கூறுவர்.

x-ray lithography : எக்ஸ்-கதிர் லித்தோகிராஃபி: ஒரு நுண்மீட்டருக் கும் குறைவானகோடுகளைப் போட ஒருங்கிணைந்த மின்சுற்றைச் செயல் படுத்தும் ஒரு நுட்பம்.

X windows : எக்ஸ் விண்டோஸ் : டிஜிட்டலும், ஐபிஎம்மும் சேர்ந்து எம்ஐடியில் உருவாக்கிய வரைகலை பணி நிலையத்துக்கான சாளர அமைப்புச் சூழ்நிலை. கட்டமைப்பில் உள்ள ஒரு கணினி அமைப்பில் உருவாக்கப்பட்ட வரைகலையை வேறொரு பணிநிலையத்தில் காட்டுவதற்கு வரைகலைக்காக வடிவமைக்கப் பட்டது. எக்ஸ் விண் டோஸ் எல்லா செயலாக்க அமைப் பிலும் ஓடுமாறு அமைக்கப்பட்டு