பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zip

735

zoom


 பின்னுக்குத் தள்ளியது. அதற்கடுத்து ஐ.பி.எம் பி.சி.யில் பயன்படுத்தப் பட்ட 8088 சிப்பு கணினித் துறையில் புரட்சியையே ஏற்படுத்தியது.

zip : சிப் : பிகேசிப் (PKZIP) பைப் பயன்படுத்தி ஒரு கோப்பை சுருக்கு தல்.

zip files : சிப் கோப்புகள் : பிகேசிப் பைப் பயன்படுத்தி சுருக்கிய வடிவத் தில் உருவாக்கப்படும். ZIP விரி வாக்கம் உள்ள கோப்பு. இவற்றைப் பயன்படுத்த அவற்றை விரிக்க வேண்டும். PKUNZIP.EXE ஆணைத்தொடர் சுருக்கிய கோப்புகளை வழக்கமான அளவில் விரிக்கிறது. தகவல் பாதுகாப்பதற்கு வசதியான, சிக்கனமான வழி இதுவே.

zip mode : சிப் முறை : வரைவியின் இயக்க முறை. இதில் ஒவ்வொரு உள்ளிட்டுக் கட்ட்ளையும் கூட்டிய மாறுபாட்டைக் குறிப்பிடும்.

zmodem : இசட் மோடம் : எக்ஸ் மோடத்தை விட திறமைமிக்க, ஒரே நேரமல்லாத கோப்பு மாற்றல் வரை முறை. கோப்பு பெயர், தகவல் மற்றும் அளவையை அது முதலில் அனுப்புகிறது. மாறும் கட்ட அளவு களை ஒட்டி மாறுகின்ற வரி நிலைக்கு ஏற்ப சமாளிக்கிறது. சிஆர்சி பிழை திருத்தத்தைப் பயன் படுத்துவதுடன் தாமதமாகும் செயற் கைக்கோள் அனுப்பும் முறைக்கும் ஏற்றது.

Z-net:இசட்-நெட்: ஈதர்நெட் போன்ற குறும் பரப்புக் கட்டமைப்பு.

zombie process : சோம்பி செயல் முறை : அதன் நுழைவு செயலாக்கப் பகுதிக்கு வந்தபோதிலும், பயனாளர் அல்லது கெர்னல் இடம் ஒதுக்கப் படாத, முடிந்த செயல்முறை. AIX இல் பயன்படுவது.

zone bits : மண்டலத் துண்மிகள்; வட்டாரத் துண்மிகள் : ஆல்ஃபா எண்மான எழுத்துகளைக் குறிக்கும் எண்மானத் துண்மிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் தனிவகைத் துண்மிகள்.

zone punch : மண்டலத்துளை; வட்டாரத்துளை ஹொலரித் அட்டை யில் ஒ, எக்ஸ் அல்லது ஒய் வரிசை யிலுள்ள துளை.

zone : மண்டலம் ; வட்டாரம் : மீண்டும் பயன்படுத்தக்கூடிய வட்டின் பகுதியில் தங்குகின்ற வட்டுப் பதி வேடுகளில் ஒரு பகுதி.

zone portion : மண்டலப்பகுதி.

zone position : மண்டல நிலை.

zoned decimal :பிரிக்கப்பட்ட பதின்மம்: ஈ.பி.சி.டி.ஐ.சி-யில் குறி யீடு இடப்பட்ட எண்னெழுத்து, ஒவ்வொரு பதின்ம இலக்கமும் ஒரு எட்டியல் சேமிப்பக அளவுள்ளது. இலக்கங்கள் 4 முதல் 7 வரையிலான துண்மிகளிலும், குறியீடுகள் 0 முதல் 3 வரையிலும், மற்றவை 1 களிலும் இருக்கும். சான்றாக, பிரிக்கப்பட்ட பதின்ம படிவத்தில் +123-ன் பதின்ம மதிப்பு 111 0001 1111 0010 1100 0011 என்று குறிப்பிடப்படும். கட்டப் படாத பதின்ம படிவம் என்றும் இது அழைக்கப்படும்.

zoo: ஜூ: இலவச சுருக்கும்.ஆணைத் தொடர். மூலக் குறியீடு அடங்கியது. யூனிக்ஸ், டாஸ் மற்றும் பிற சூழ் நிலைகளில் பயன்படுவது.

zoom ; பெரிதாக்கு : பல வரைகலை மற்றும் சில விரிதாள் தொகுதிகளில் காணப்படும் தன்மை. வரைகலைப் பொருளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பெரிதுபடுத்திப் பார்க்க இது பயனாளரை அனுமதிக்கிறது.