பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zoom fac

736

Zuse



ஒளிப்படக்கலையில் இருந்து இச் சொல் பெறப்பட்டது (ஜூம் லென்ஸ்).

zoom factor : பெரிதாக்குக் காரணி.

zoom in : அண்மையாக்கு; உள்ளிருப் பதைப் பெரிதாக்கு : பல் ஊடகப் பயன்பாடு அல்லது கணினி வரை கலையில் ஏற்படும் ஒளிப்பட மாற்றம், அது படமெடுக்கும் பொருளை நோக்கி ஒளிப்படக்கருவி நெருங்கி வருவதுபோல் தோன்றுவது. செயலாற்றும் பொருளின் நெருங்கிய பார்வை இதில் கிட்டுகிறது. விரிவாக செயலாற்ற இது மிகவும் உதவி கரமானது. 'இன்ஜூம்' முறையில் அளவு பெரிதாகும்.

zooming : மேற்செலுத்தம் ; பெரிதாக்கல் : தற்போது காட்சியில் தெரியும் படத்தின் அடுத்தடுத்த சிறிய பகுதிகள் மீது நகர்த்துவதன் மூலம் அல்லது முழுத்திரையினையும் விண்டோ மூடிக்கொள்ளும்வரை நகர்த்துவதன் மூலம் ஒரு வரைகலைக் காட்சியின் தோற்றத்தை மாற்றுதல். ஒரு காட்சித் திரையில் காட்டப்படும் ஒர் உருவத்தை விரிவாக்குகிற அல்லது குறைக்கிற திறம்பாடு.

zoom out : சிறிதாக்கு; சேய்மையாக்கு: கணினி வரைகலை அல்லது பல் ஊடகப் பயன்பாடுகளில், ஒளிமுறை ஒளிப்படக்கருவியில் ஏற்படும் மாற்றம். இதில் கருவியானது அது படம்பிடிக்கும் பொருளில் இருந்து பின்னோக்கி வருவது போலத் தோன்றும். 'ஜூம் அவுட்' முறையில் அளவு சிறிதாகும்.

zoom pyramid : பிரமிடாக்கு : அதிகத் தெளிவான உருவமும், அதையடுத்து அதன் பாதியளவே தெளிவான உருவமும் கொண்ட தொடர்ச்சியான இலக்க உருவங்கள். உயர் தெளிவுக்குத் தேவைப்படும் இடத்தில் மூன்றில் ஒரு பங்கே தேவைப்படும். எந்தவகையான தெளிவான உருவமும் விருப்பம் போல் பெறலாம். நேரடியாகவோ அல்லது ஒன்றில் ஒன்றை நுழைத்தோ பெறலாம்.

Z-parameter : இசட்-அளவுகோல் : நான்கு டிரான்சிஸ்டர்களின் தொகுதிக்குச் சமமான மின்சுற்று அளவு கோல்களில் ஒன்று. ஒய் அளவு. கோலின் தலைகீழ் அமைப்பு.

Zuse, Konrad : ஜூஸ், கோன்ராடு : கணினிச் சாதனங்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்கிய ஜெர்மன் அறிஞர். இவர், 1941இல், வியக்கத்தக்க முன்னேறிய அம்சங்கள் கொண்ட ஜூஸ் இசட்-3 என்ற எந்திரத்தை உருவாக்கினார். இதன் வேகம் மார்க் I கம்ப்யூட்டரின் வேகத்துக்கு இணையானது.