பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

author lan 72 automat


அமைப்பின் தகுதி அல்லது அடிப் படை இயக்கத்தை மாற்றக்கூடிய ஒரு கணினி செயல்முறை.

author language :ஆசிரிய மொழி : கணினி வழி கற்பித்தலுக்கான கட்டளை ஆணைத் தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி.

authors : ஆசிரியர்கள் : கணினி வழிக் கற்றலுக்கான பாட முறைமைகளை வடிவமைப்போர்.

auto answer : தானியக்கப் பதில் : கணினிகளிலிருந்து வரும் தொலை பேசி அழைப்புகளுக்கு தானியக்க முறையில் பதிலளிக்கும் மோடெம் ஒன்றிலிருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை அனுப்பக் கூடியது.

auto attendent : தானியங்கி உதவிப் பொறி : மனிதர்கள் இயக்குவதற்கு மாற்றாகக் குரலை சேமித்து அனுப்பி வைக்கும் அமைப்பு. அழைப்பவர் களைக் குரல் அஞ்சல் பெட்டிகளுக்கு அனுப்பி வைப்பது.

auto bypass : தானே ஒதுங்கிப் போதல் : கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட முனையமோ அல்லது பிற சாதனமோ பழுதானால், அதை நீக்கி மாற்று வழியில் போகும் திறன். இதனால் மற்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்க முடியும்.

auto chart : தானியக்கப் பட்டியல் ; தானியக்க வரைவு :

auto dial : தானியக்க எண் சுழற்றி; தானியக்க அழைப்பி : தொலைபேசி இணைப்புடன் பொருந்தக் கூடிய மோடெம். ஒரு தொலைபேசி எண்ணைச் சுழற்றி மோடெமும் தகவல் தொடர்பு மென்பொருளும் முறையான தகவல் தொடர்பு நடைமுறைகளை நிறைவேற்றக் கூடியவை. அதனால் கணினிகளுக் கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

AUTODIN :ஆட்டோடின் : தானியக்க இலக்க இணையம் எனப் பொருள் படும் AUTOmatic Digital Network என்பதன் குறும் பெயர். ராணுவ தகவல் தொடர்பு முறையில் தகவல் களைக் கையாளும் பகுதி.

auto indexing : தானியக்கப் பட்டியலிடல் : முறைமைப்பட்டியலிடுதல். கூடுதல் தகவல்களை, தரப்பட்டுள்ள முகவரிகளில் ஏதாவது ஒன்றில் கூடுதல் இணைப்பைச் சேர்த்தல்.

auto-load: தானியக்க ஏற்றி : சில கணினி விசைப் பலகைகளில் உள்ள விசை - கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள் சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது.

automata : தானியக்கக் கொள்கை : இயக்கக் கோட்பாடுகள், தானியக் கக் கருவிகளைப் பயன்படுத்துதல் பற்றிய கல்வியுடன் தொடர்புடைய கொள்கை.

automated data processing : தானியக்கத் தகவல் செயலாக்கம் : குறைந்த பட்ச மனித முயற்சி மற்றும் இடை யீட்டுடன், தகவல்கள் கையாளப் படும். பெரும்பாலும் தானே ஒழுங்குபடுத்திக்கொள்கிற முறை.

automated flowchart : தானியக்கத் தொடர் பட்டியல் : கணினி கட்டுப் பாட்டில் உள்ள அச்சிடு கருவி அல் லது வரை கருவியினால் வரையப் படும் தொடர் பட்டியல்.

automated office : தானியக்க அலுவலகம் : அலுவலகச் சூழலில் கணினிகள்