பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

automatic 73 automatic pag

அலுவலக மின்னணுக் கருவிகள் மற் றும் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுணுக்கம் ஆகியவை இணைவதன் விளைவு . மின்னணு வியல் அலுவலகம் என்பதைப் பார்க்கவும்.

automatic : தானியங்கி : சில குறிப் பிட்ட சூழல்களில் மனித இயக்கு வோரின் இடையீடு இல்லாமல் இயங்குகிற நடைமுறை அல்லது கருவி தொடர்பானது.

automatic abstract: தானியங்கிச் சுருக்கம் : ஒரு ஆவணத்தில் இருந்து முக்கிய சொற்களை ஆணைத் தொட ரே சுருக்கிக் கொள்கிறது.

automatic carriage: தானியக்க ஏற்றி: தட்டச்சுப் பொறி அல்லது அச்சிடு கருவி ஒன்றுக்கான கட்டுப்பாட்டுப் பொறியமைவு. அது தானே காகிதம் நகர்த்தல், சொற்களுக்கு இடைவெளி தருதல், வரி தாள் காகிதத்தை வெளி யேற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

automatic check : தானியக்கத் தடை; தானியக்கச் சரிபார்ப்பு: தானியக்கத் தடை உள்ளமைப்புச் செய்யப் பட்டது.

automatic coding : தானியங்கிக் குறியீடமைத்தல் : தானியக்கக் குறிமுறை யாக்கம் தொகுப்பி போன்ற ஒரு ஆணைத் தொடரைப் பயன்படுத்தி சங்கேதக் குறியீட்டிலிருந்து எந்திரக் குறியீட்டை உருவாக்குதல்.

automatic computer : தானியங்கு கணினி : ஒரு குறிப்பிட்ட வேலையை செயல்படுத்தும் கணினி. ஆணைத் தொகுப்பை மாற்றுதல் தவிர வேறு மனிதக் குறுக்கீடு இல்லாமல் செயல் படுத்தவல்லது.

Automatic controller : தானியங்கு கட்டுப்பாட்டுப் பொறி : உணர் சாதனம் மூலம் வரும் சமிக்ஞைகளை ஏற்றுக் கொண்டு, ஒழுங்குபடுத்தி, தகவல்களை ஒப்பிட்டு தேவையான திருத்தங்களைச் செய்யும் திறனுள்ள ஒரு கருவி அல்லது சாதனம்.

automatic data processing : தானியங்குத் தகவல் செயலாக்கம் : தகவல் களின் மீது எந்திரங்களைப் பயன் படுத்தி தொடர் இயக்கங்களைச் செய்வது.

automatic error correction : தானி யக்கப்பிழைதிருத்தம் : தகவல் அனுப் புதலில் ஏற்படக்கூடிய அல்லது அமைப் பிலேயே ஏற்படக்கூடிய தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் உத்தி.

automatic feature negotiation : தானியங்கு ஏற்புத் தன்மை : எதிர் முனை யில் உள்ள மோடெத்தின் வேகம், பிழை கட்டுப்பாடு மற்றும் தகவல் சுருக்குதல் முறைக்கேற்பத் தன்னை சரிசெய்து கொள்ளும் மோடெத்தின் திறன்.

automatic hyphenation : தானியங்கி ஒட்டுக்குறியமைத்தல் : சொற்களின் இடையில் தானாகவே சிறுகோடு அமைக்கும் தன்மை. சொல் செயலி மற்றும் பக்க வடிவமைப்பு ஆணைத் தொடர்களில் அதிகம் காணப் படுவது.

automatic loader : தானியக்கி ஏற்றி : வன்பொருள் செயல்பட துவக்கும் ஆணைத் தொகுப்பு.

automatic message switching : தானியக்கச்செய்தி அனுப்புதல்.

automatic pagination : தானியங்கி பக்கமமைத்தல் : செய்தி வரிகளைப் பக்கவாரியாகத்தானாகவே பிரிக்கும் தன்மை. சொல் செயலி மற்றும் பக்க