பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

automatic pro 74 auto pilot

வடிவமைப்பு ஆணைத் தொடர் களில் காணப்படுவது.

automatic programming : தானியக்க ஆணைத் தொகுப்பு முறை : 1. ஆணைத்தொகுப்பு ஒன்றைத் தயாரிப் பதில் சில நிலைப் பணிகளைச் செய் யக்கணினி ஒன்றைப் பயன்படுத்தும் முறை. 2. எந்திர மொழிக் கணினி ஆணைத்தொகுப்பு ஒன்றை ஆணைத் தொகுப்பின் குறியீட்டுத் தொகுப் பின் வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தல்.

automatic quality control : தானியக்க தரக்கட்டுப்பாடு: செயலாக்கப்படும் பொருளின் தரத்தை, ஏற்கெனவே நிர் ணயிக்கப்பட்ட தர அடிப்படையில் சோதித்து; நிர்ணயிக்கப்பட்ட தரத் துக்கும் குறைவாக இருக்குமானால், சரி செய்வதற்கான நடவடிக்கை யினை மேற்கொள்வதற்கான உத்தி.

automatic recovery programme : தானே மீளும் ஆணைத் தொடர் : வன் பொருள் செயலிழத்தலின்போது கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு கணினியை இயங்க வைக்கும் ஒரு ஆணைத் தொடர்.

automatic reformating : தானாக மீண்டும் வடிவமைத்தல் : சொல் செயலியில் மாற்றங்களை ஏற்று வரிகளைத் தானாகச் சரிசெய்து கொள்ளல்.

automatic scrolling : தானாக ஊடுருவல் : ஒரு நீண்ட ஆவணம் கணித்திரையில் கீழ்மேலாக அல்லது மேல் கீழாக உருண்டு செல்லல்.

automatic shutdown : தானியக்க பணி நிறுத்தம் : ஒழுங்கு முறைப்படி இணையம் (Network) ஒன்றை அல்லது கணினியின் செயல் பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென் பொருள் ஒன்றின் திறன்.

automatic tag reader : தானியங்கிப் படிப்பான் : வட்டமான ஓட்டைகள் உடைய துளையிட்ட அட்டை களைப் படித்தறியும் ஒரு சாதனம்.

automatic teller machine (ATM) : தானி யங்கிப் பணப் பொறுப்பு எந்திரம் : வங்கி ஒன்றின் முனையம். அது வாடிக்கையாளருக்கு 24 மணி நேர வைப்பு மற்றும் திரும்பப் பெறும் சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணினியுடன் இணைக்கப்பட்ட சிறப்பு நோக்கமுடைய கருவி. தானி யக்கக் கருவியை வாடிக்கையாளர் இயக்க ஒரு பிளாஸ்டிக் அடையாள அட்டையைச் செருகி, சிறப்பு அனுமதிக் குறியீட்டை குறிப்பிடு கிறார். முறைமையுடன் எண்ணியக்க விசை அட்டை மற்றும் வரி வடிவ வெளிப்பாடு மூலம் தொடர்பு கொள்கிறார்.

automation : தானியக்கமுறை; தானியங்கி: 1. நடைமுறை ஒன்றை தன்னி யக்க முறையில் செயல்படுத்துதல். 2. கருவி அல்லது நடை முறை அல்லது முறைமையினை மனித நோக்கு , முயற்சி அல்லது முடிவுக்கு மாற் றாக, பொறியமைவு அல்லது மின் னணுவியல் கருவி மூலம் தன்னியக்க முறையில் கட்டுப்படுத்தும் செயல்.

automonitor : தானியக்க கண் காணிப்பி : 1. கணினி நடவடிக்கை களின் கணினிப்பதிவேடு. 2. கணினி ஒன்றின் செயல்பாட்டு நடைமுறை களை பதிவு செய்யும் கணினி ஆணைத் தொகுப்பு.

autopilot : தானியக்க விமானி: விமா னம் ஒன்றை அல்லது விண்வெளிக் கலத்தைப் பறக்கச் செய்ய உதவும் கருவி.