பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

available 76 azimuth

இயக்க நேரத்துக்கும் உள்ள விகிதம். இதனை செயலாக்க விகிதம் என்று பெரும்பாலும் கூறுவதுண்டு.

available time : கிடைக்கும் நேரம் : கணினி ஒன்று பயன்படுத்துவதற்கு கிடைக்கும் நேரம்

average : சராசரி : புள்ளி விவர அல்லது எண்ணிலக்கச் சராசரி.

average latency : சராசரி உள்ளுறை சுணக்கம் : நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில் முழு சுழற்சியில் பாதி யில் பதிவுப்பரப்பில் சுற்றிவர ஆகும் நேரம்.

avionics : வான் மின்னணுவியல் : விமானங்கள் மற்றும் விண்கலங் களில் பயன்படும் மின்னணுக் கருவி யமைப்புகள் மற்றும் கட்டுப் பாட்டுக் கருவி.

auxiliary equipment : துணைச் சாதனம் : மையச் செயலாக்க அலகின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கருவி.

auxiliary function : துணைச் செயல் : தன்னியக்க எந்திரக் கருவிக் கட்டுப் பாட்டில், செயல்படு கருவி ஒன்றின் வேகக் கட்டுப்பாடு அல்லது எந்திரத் தின் வெட்டுக் கருவியின் கட்டுப் பாடு நீங்கலாக பிற செயல்கள். எண் ணெயிடல், கருவியைக் குளிர்வித் தல் முதலியன மாதிரித் துணைச் செயல்களாகும்.

auxiliary memory : துணைநினைவகம்.

auxiliary operation : துணைச் செயல்பாடு : மையச் செயலாக்க அலகின் கட்டுப்பாட்டில் இல்லாத கருவியி னால் செய்யப்படும் செயல்பாடு.

auxiliary storage :துணைசேமிப்பகம்: கணினியின் முக்கிய சேமிப்பகத்துக் குத் துணையாக அமையும் சேமிப்பகம். மின்காந்த வட்டுகள் மின் காந்த நாடாக்கள் போன்றவை துணை சேமிப்பகங்கள். இது உள் சேமிப்பகத்திலிருந்து மாறுபட்டது.

average search length : சராசரித் தேடு நீளம்: ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கண்டுபிடிக்க சராசரியாகத் தேவைப் படும் நேரம் அல்லது செயல்களின் எண்ணிக்கை.

AWC : ஏடபிள்யூசி : கணினியைக் கையாளும் பெண்களுக்கான சங்கம்: Association for women in computing என்பதன் குறும்பெயர். கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரைக் கொண்ட சங்கம். கணினித் தொழி லில் பெண்களுக்கான தொழில் திறனை வளர்த்தல்; கணினித் தொழி லில் ஈடுபட்டிருப்போரிடையே தக வல் தொடர்பை ஊக்குவித்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.

awk :ஏடபிள்யுகே : Aho weinberger Kernighan என்பதன் சுருக்கம். அஹோ, வெயின்பர்கர், கெர்னிகன் ஆகியோர் 1977இல் உருவாக்கிய யூனிக்ஸ் ஆணைத் தொடர்.

axes : அச்சுகள் : ஒரு இரட்டைப் பரி மாண ஒருங்கிணைப்பு முறைமை யில் செங்குத்து (Y) மற்றும் படுக்கைக் குறியீடு (X)களாகப் பயன் படுத்தப்படும் கோடுகள்.

axons : ஆக்சன்கள் : மனித மூளை யில் ஒரு நரம்பணுவிலிருந்து இன் னொரு நரம்பணுவுக்கு இந்த நரம்பு கள் மூலம் வெளியீடுகள் அனுப்பப் படும்.

azimuth : அஸிமத் : ஒரு ஆதாரப் பகுதியில் இருந்து கடிகாரப் போக் கில் செல்லும் கோணத்தை அளக்கும் கருவி. வழித்தடத்தில் உள்ள படி / எழுது முனைகளின் சரியான அமைப்பை இது சோதிக்கும்.