பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

background 78 back pan

background operation : பின்புல இயக்கம் : ஒரு ஆணைத் தொடர் ஓடிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு ஆணைத் தொடர்தொகுப்பதற்கான பணியைச் செய்யும்போது, அச்சுப் பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கிடுதல் களைப் பயன்படுத்தி பின்னணி இயக்கம் நடைபெறலாம்.

background processing : பின்னணி செயலாக்கம் : முன்புறத்தில் ஒரு ஆணைத் தொடர் செயல்படும்போது பின்னணியில் அதே நேரத்தில் வேறொரு ஆணைத் தொடர் இயக் கப்படுவது.

background programme : பின்புல ஆணைத் தொடர் : பல ஆணைத் தொடர்களை ஒரே சமயத்தில் செயல் படுத்தும் கணினி அமைப்புகளில் உயர் முன்னுரிமை உள்ள ஆணைத் தொடர்களைச் செயல்படுத்தத் தேவையில்லாதபோது செயல்படுத் தப்படும் ஆணைத் தொடர். முன்புல ஆணைத் தொடருக்கு மாறானது.

background reflectance : பின்னணி பிரதிபலிப்பு : ஒரு எழுத் தைச் சுற்றி ஏற்படும் பிரதிபலிப்பை அளக் கும் ஓசிஆர்.

backing storage : தாங்கும் இருப்பகம் : பின்னர் பயன்படுத்துவதற்காக வட்டுகள் அல்லது நாடாக்களில் வைக்கப் பட்டிருக்கும் துணை நிலை நினைவகம்.

backing store : பின்தாங்கும் இருப்பகம் : கணினி யின் முதன்மை நினை வகத்திற்கு பின்பலமாக இருந்து தாங்குகின்ற நினைவகம். துணை இருப்பகம் என்று அதிகமாக அழைக் கப்படுகிறது.

backing-up :பின் ஆதரவு : மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள் ளடக்கங்களை இழக்காமல் தடுப் பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல்.

backlash : பின் விளைவு : இயந்திர முறை செயல்பாட்டின்போது, தாங்கு வதன் விளைவாக இரண்டு பல் சக் கரங்களைப் போன்ற சேர்ந்தியங்கும் பகுதிகளின் செயல்.

backline : பின் பகுதி : ஒரு அமைப் பின் அட்டைகளில் மின்சுற்றுகள் மற்றும் எந்திரப் பகுதிகள் இணைக் கப்படுவதுண்டு. இதில் முதன்மை மின்சுற்று அட்டைகள் பொருத்தப்படும். தாய்ப்பலகை என்றும் அமைப் புப் பலகை என்றும் அழைப்பர்.

backlit : பின்னொளி : திரையின் பின் பக்கத்திலிருந்து ஒளி வருகின்ற எல்சிடி திரை. இதனால் பின்னணி பிரகாசமாகவும் எழுத்துகள் தெளிவாகவும் இருக்கும்.

back panel : பின் அட்டை : கணினி பெட்டியில் வெளிப்புறச் சாதனங்களை கணினியுடன் இணைபதற்காக.