பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

back sla 79 Backus

பல துளைகளுடன் கூடிய பின் புறப்பகுதி.

back slash : பின் சாய்வுக்கோடு : விசைப் பலகையில் உள்ள ஒரு சிறப்புக் குறியீடு.

backspace : பின்னிடம் : அடையாள அம்பை இடது புறமாக ஒரு இடத் திற்கு நகர்த்துகின்ற விசைப் பலகை யின் செயல்பாடு. ஏற்கனவே தட் டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது.

backspacekey: பின்னிடவிசை (விரற் கட்டை )

backspace tape : பின் இட நாடா : ஒரு காந்த நாடாவை அது ஆரம்பித்த இடத்திற்கோ அல்லது பதிவேட்டிற் கோதிருப்பி அனுப்பும் செயல்பாடு.

backtracking : பின் தேடல் : ஒரு பட்டி யலை தலைகீழாகத் தேடும் செயல் முறை.

backup: பின் ஆதரவு: பின்படி; ஆதார நகல்; மறுபடி : 1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல் முறைகள் அல் லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப் பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்து வதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல் முறைகள் பற்றியது. 2. மூலம் தொலைந்து போகக்கூடும் என்பதற்காக ஆணைத் தொடர் அல்லது தகவலுக்கு ஒரு பிரதி எடுத்தல்.

backup copy : பின் ஆதரவுப் பிரதி; பக்க ஆதரவுப் படி : மூலத் தகவல் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன்படுத்துவதற் காக வைக்கப்பட்டுள்ள கோப்பு அல்லது தகவல் தொகுப்பின் பிரதி .

backup disk : பாதுகாப்பு வட்டு : முக்கிய கோப்புகளின் பிரதி நகல்களை வைத்துக் கொள்ளப் பயன்படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக் கூடிய வட்டுப் பெட்டிகளும் பாது காப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை.

backup files: பாதுகாப்புக் கோப்புகள்; பக்க ஆதரவு கோப்புகள் : மூலை கோப்புகள் சேதமாகி அல்லது அழிந்து போனால், பயன்படுத்தக் கூடிய கோப்புகளின் பிரதிகள்.

backup power : பாதுகாப்பு மின்சக்தி : மின்சாரம் நின்று போகுமானால் பயன்படுத்தக்கூடிய கூடுதல் மின்சார ஆதாரம்.

backup procedures : பாதுகாப்பு நடைமுறைகள் : பாதுகாப்பு அளிப் பதற்காக மாற்று நாடாக்கள் அல்லது காந்த வட்டுகளில் தகவல்கள் மற் றும் ஆணைத் தொடர்களை நகல் எடுப்பதற்கான நடைமுறைகள்.

backupprograrimer : துணை ஆணைத் தொடர் எழுதுபவர் : தலைமை ஆணைத் தொடர் எழுதுபவருக்கு உதவியாளராக இருக்கும் ஒரு ஆணைத் தொடர் எழுதுபவர்.

backup & recovery : பாதுகாப்பும் திரும்பப் பெறலும் : வன் பொருள் அல்லது மென் பொருள் பழுது ஏற் படும்போது இழந்து போன தகவல் களை மீண்டும் பெறக்கூடிய மனித னாலான, எந்திரத்தினாலான நடை முறைகளின் இணைப்பு. தகவல் தள வழிகளில் மாற்று ஏற்பாடும், அமைப்புப் பாதுகாப்பும் கணினி இயக்கங்களின் போக்கைக் கண் காணித்து பாதுகாத்து, திரும்பப்பெற உதவும்.

Backus, John : பேக்கஸ், ஜான் : 1957இல் ஐபிஎம் நிறுவனத்தில் பணி