பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

barrel 82 baseline

barrel distortion : உருளைச் சிதைவு : பக்கவாட்டில் வெளியேறக் கூடிய திரைக்காட்சிச் சிதைவு.

barrel printer : உருளை அச்சுப் பொறி : Drum Printer-க்கு வேறொரு பெயர்.

base : ஆதாரம் ; தளம்: 1. எண் முறை யின் ஒரு மூலம். 2. எமிட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத் திற்கும் எமிட்டருக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட மின்சுற்று அட்டையில் அச்சிட்ட அமைப்பைத் தாங்கும் பகுதி.

base address : ஆதார முகவரி; அடிப் படைமுகவரி;அடி முகவரி : ஒரு குறிப் பிட்ட இருப்பிடத்தின் முழு முக வரியை உருவாக்க துணை முகவரி யுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி.

base alignment : அடிப்பகுதி அடுக்குதல் : அடிக்கோடுகளில் பலவித அள வுகளில் எழுத்து வடிவங்களை அடுக்குதல்.

baseband : அடிப்படைக் கற்றை ; தாழ் அலைவெண் : தாழ் அலை வெண் வழித்தடத்தில் முழு பட்டை அகலமும் பயன்படுத்தப்பட்டு டிடி எம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும்.

baseband networking : தாழ் அலை வெண் இணையம்: அனுப்பும் சாதனத் தில் இலக்கமுறை சமிக்ஞையை நேரடியாக வைக்கும் தகவல் தொடர்பு முறை.

baseband transmission : தாழ் அலை வெண் பரப்புதல் : கோயச்சியல் குழாய் மூலமாக குறைந்த தூரத்துக்கு குறைந்த அலைவரிசையில் சமிக்ஞைகளை அனுப்பும் முறை.

base case disk : அடிப்பெட்டி வட்டு : சிடி 1-இல் பேஸ் கேஸ் அமைப்பில் இயங்கக்கூடிய வட்டு.

base case system : அடித்தட்டு அமைப்பு : சிடி முழு அமைப்பு அளவுகளில் குறைந்த அளவே பயன் படுத்துதல்.

base class : அடிப்படை இனக்குழு : பொருள் சார்ந்த ஆணைத் தொடர் களில், இனக்குழு அமைப்பில் பொதுவான அமைப்பு. பெரும்பா லான பயன்பாடுகளில் இவை உண்டு. பல மொழிகள் பழங்கால அடிப்படை இனக்குழுவை வரை யறுக்கின்றன. இவை எல்லா இனக் குழுக்களுக்கும் இறுதி உயர் இனக் குழுவாக அமைகின்றன.

base/displacement : அடிப்படை / இடமாற்றம் : நினைவகத்தின் எந்த இடத்தில் இருந்து ஆணைத் தொடர் களை இயக்கும் தொழில் நுட்பம். எந்திர மொழி ஆணைத் தொடர் களில் உள்ள முகவரிகள் ஆரம்பத்தில் இருந்ததை நோக்கி இடம் மாறிய முகவரிகள். ஆணைத் தொடர் இயக் கப்படும்போது மாறிய முகவரியை வன்பொருளானது அடிப்படை முக வரிக்கு அளித்து முழு முகவரியைப் பெற்றுத் தரும்.

base point : அடிப்படை எழுத்து வடி வம்; அடிப்படைப் புள்ளி : எண் முறை யின் ஆரம்ப நிலை. வேறொன்றும் குறிப்பிடவில்லையென்றால் அச் சடிக்கப் பயன்படும் எழுத்து வடிவம்.

baseline : அடிப்படைக்கோடு : சிறிய எழுத்தின் அடிப்பகுதிகள் வரிசைப் படுத்தப்படும் குறுக்கு வட்டக்கோடு.

baseline document : ஆதார ஆவணம் : தகவல் செயலாக்க அமைப்