பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

base mem 83 batch

பில் ஒரு தகவலை மாற்றம் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்புதவி ஆவணம்.

base memory : அடிப்படை நினைவகம் : ஒரு பிசி -யில் இயங்கும் டாஸ் ஆணைத் தொடர்களுக்குக் கிடைக் கும் முதல் 640 கிலோ எட்டியல் (பைட்) நினைவகம். பிசி - யின் நினைவகப்படம்.

base name : அடிப்படைப் பெயர் : புள்ளியால் பிரிக்கப்படுவதற்கு இடது புறம் உள்ள கோப்புப் பெயரின் பகுதி. எட்டு எழுத்துகள் வரை நீளம் இருக்கும். ஆரம்பப் பெயர் அல்லது ஒரு கோப்பின் முதல் பெயராகவும் இருக்கும்.

base register : அடிப்படைப்பதிவகம்: தொடர்பு முகவரியை முழு முகவரி யாக மாற்றும் பட்டியல் பதிவகம்.

BASIC : ஒரு கணினி மொழி பேசிக் (தொடக்கநிலை பல்திறன் குறியீட்டுப் பரிமாற்ற மொழி : Beginners All Purpose Symbolic Instruction Code என்னும் நீண்ட பெயரின் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்துகளின் சுருக் கப்பெயர். கற்பதற்கும் பயன்படுத்து வதற்கும் எளிமையான ஒரு கணினி ஆணைத் தொடர்மொழி. மிகக்குறை வான ஆணைகளும் எளிய சொற் றொடர் வடிவங்களும் உடையது. டார்ட் மவுத் கல்லூரியில் ஜான் கெம்னி மற்றும் தாமஸ் குர்ட்ஸ் ஆகி யோரால் உருவாக்கப்பட்டது. சொந் தக் கணினியிலும் வணிக, தொழில் துறை, நுண்கணினிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

basic contents : அடிப்படை உள்ளடக்கங்கள் :

basic FORTRAN: அடிப்படை ஃபோர்ட் ரான் : ஃபோர்ட்ரான் ஆணைத்தொடர் மொழியில் அமெரிக்காவில் அங்கீ கரிக்கப்பட்ட இரண்டு பிரிவுகளில் ஒன்று.

BASIC in ROM : ரோமில் பேசிக் : பயன்படுத்துவோருக்கு எப்போதும் கிடைக்கும் வகையில் படிக்க மட் டும் நினைவகத்தில் சேமித்து வைத் துள்ள பேசிக் மொழி பெயர்ப்பி.

Basic Input Output System (BIOS) : பேசிக் உள்ளீடு / வெளியீடு அமைப்பு: வட்டு இயக்கி தொடர்பானது தவிர மற்ற உள்ளீடு / வெளியீடு பணி களைக் கட்டுப்படுத்தும் செய்லாக்க அமைப்பின் பகுதி.

bat file (Batchfile) : பேட் கோப்பு : ஒன்றையடுத்து ஒன்றாக இயக்கப் பட்டு வரும் டாஸ் அல்லது ஓஎஸ்/2 கட்டளைகளின் தொகுதியைக் கொண்ட கோப்பு.

Basic linkage : அடிப்படை இணைப்பு: ஓர் ஆணைத் தொகுதியின் சிறு செயல்கூறு அல்லது ஒரு ஆணைத் தொகுதி அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஓர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே மாதிரியான விதிமுறைகளையே பின்பற்றும்.

BASIC PLUS : பேசிக் பிளஸ் : பேசிக் மொழியை நீட்டித்தல். தகவலைக் கையாளுதல் போன்ற சக்திமிக்க செயல் திறன்கள் சேர்க்கப்பட்ட பேசிக் மொழி.

batch : தொகுதி : 1. ஒரு கணினியில் செயலாக்கத்திற்காக ஒரே தொகுதி யாகக் கருதப்படும் ஆணைத் தொடர் கள் அல்லது பதிவுகளின் குழு . 2. தொகுதி முறை செயலாக்கத்தைப் பயன்படுத்துதல்.