பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

batch con 84 battery

batch control : தொகுப்புக் கட்டுப்பாடு : தகவலின் சரியான தன்மையை உறுதி செய்ய கட்டுப்பாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை இது குறிப் பிடுகிறது.

batch control document : தொகுப்புக் கட்டுப்பாடு ஆவணம் : உள்ளீடு தகவல் தொகுதியைக் கொண்ட கட் டுப்பாட்டு ஆவணம். இதில் கட்டு எண், தொகுப்பு தேதி, ஆவணங் களின் எண்ணிக்கை, உள்ளீடு தகவலின் கட்டுப்பாட்டு மொத்த எண்ணிக்கைகள் போன்ற தகவல் இருக்கும்.

batch file : தொகுப்புக் கோப்பு: வரிசையாக இயக்கப்படும் கட்டளை களின் பட்டியலைக் கொண்ட டாஸ் கட்டளைகள் செயல்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும் ) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுப்புக் கோப்புகள் பயன்படுத் தப்படுகின்றன.

batch job : தொகுப்பு வேலை.

batch processing : தொகுதிச் செய லாக்கம்; தொகுப்பு முறை: 1. செய்யப் படவேண்டிய ஆணைத் தொடர் களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலையைக் கொடுத் தால் அங்கு ஆணைத் தொகுதியாக் கப்பட்டு செயல்படுத் தப்பட்டபின் திருப்பி அளக்கப்படுகிறது. பயனாள ருக்கு எந்திரத்துடன் நேரடி தொடர்பு இல்லை . 2. நீண்ட காலமாக சேர்க்கப் பட்டு வந்த ஒரு தகவல் தொகுதி யையோ அல்லது சம்பளப் பட்டியல், விலைப் பட்டியல் தயாரித்தல் போன்று அடிக்கடி செய்யும் பணிகளையோ செயலாக்கப்படுத்தல்.

batch programme : தொகுப்பு ஆணைத் தொடர் : உரையாடல் முறையில் ஆணைத் தொடர் பிரித்தல் அல்லது அறிக்கை பட்டியலிடல் போன்றவை.

batch session : தொகுப்பு நேரம் : ஒரு முழு கோப்பையுமே புதுப்பித்தல் அல்லது அனுப்புதல். ஆரம்பம் முதல் கடைசிவரை தடையின்றி நடைபெறுவது. Interactive session-க்கு எதிர்ச் சொல்.

batch stream : தொகுப்பு ஓட்டம் : கணினியில் செயல்படுத்தக்கூடிய தொகுப்பு ஆணைத் தொடர்களின் திரட்டு.

batchtotal: தொகுதி முழுமை ; தொகுதிக் கூட்டல் : ஒரு பதிவேடுகளின் தொகுதியில் உள்ள வகையுருக் கூட் டங்களின் கூட்டுத் தொகை. தொகுதி யுடன் தொடர்புடைய வேலைகளின் துல்லியத்தைச் சோதிக்கப் பயன் படுத்தப்படுவது.

Batten system : பேட்டன் அமைப்பு : டபிள்யு. இ. பேட்டன் கண்டுபிடித்த பட்டியலிடும் முறை. தனி இயல்பு களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட ஆவணங்களை அடையாளம் கண் டறியப் பயன்படுவது. பீக்-ஏ-பூ என் றும் சிலசமயம் அழைக்கப்படு கிறது. அட்டைகளின் மேல் அட்டை களை வைத்து துளைகளை ஒப்பிட்டு துளைகளின் ஒற்றுமையைச் சோதித் தறிவதால் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

battery backup: மின்கல பின்னாதரவு: மாற்று மின்கல அடுக்கு : மின் தடங் களின்போது மாறி வரும் தகவலை கணினி இழந்து விடக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்படும் துணை மின்சக்தி.