பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Berr 87 bifurcation

நெகிழ்வட்டு கலந்த ஒரு சேமிப்பகச் சாதனம்.

Berr Clifford : பெர்ரி கிளிஃபோர்டு : 1939இல் ஜான் அடனசாஃபுடன் சேர்ந்து ஏபிசி எனப்படும் முதல் மின்னணு இலக்கவியல் கணினி யைக் கண்டுபிடித்தவர்.

beta testing : பீட்டா சோதனையிடல் : பொது மக்களுக்கு வெளியிடு வதற்கு முன்பு வன்பொருள், மென் பொருள்களை தேர்ந்தெடுத்த சில ரிடம் கொடுத்துப் பயன்படுத்தச் செய்து அதில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிதல்.

beta test site :பீட்டா சோதனை செய்யுமிடம் : புதிதாக உருவாக்கப்பட்ட கணினி அமைப்பை சாதாரண இயக் கச் சூழ்நிலையில் பல மாதங் களுக் குச் சோதனை செய்யும் ஒருவித செய லாக்க மையம் அல்லது ஒரு கிளை அலுவலகம் அல்லது பிரிவு. முறை யாக வெளியிடப்படும் முன்பு ஏராள மான பேர்களுக்குக் கொடுத்து பீட்டா சோதனை செய்யப்படும் மென்பொருள்.

bezier : பெஸியர் : அல்கோரிதத்தில் உருவாக்கப்படும் ஒருவகை வளைவு . ஃபிரெஞ்சு கணித மேதை பியரே பெஸியரின் பெயர் கொடுக் கப்பட்டுள்ளது. ஏராளமான வடிவங் களை வரையறுக்க பெஸியர் வளைவுகளுக்கு ஒரு சில புள்ளிகளே போதுமானது. ஓவிய ஆணைத் தொடர்களுக்கு உகந்தது.

bias : பையாஸ்: சாய்வு மதிப்புகளின் தொகுதியின் சராசரியிலிருந்து ஒரு குறிப் பிட்ட மதிப்பு விலகிச் செல்லும் அளவு.

bibliography : நூல் விவரத் தொகுதி : 1. ஆவணங்களின் விவரங்களைக் கூறும் பட்டி. 2. விவர நூல் பட்டியல். 3. ஒரு தலைப்பு அல்லது ஆசிரியர் தொடர்பான ஆவணங்களின் பட்டி யல். 4. பட்டி அல்லது பட்டியலைத் தொகுக்கும் செயல்முறை.

bigas: பைகாஸ் : Business International Country Assessment Service என்ப தன் குறும்பெயர்.

bidirectional : இரு திசையில் : ஒரு கம்பியில் தகவல் இரு திசைகளிலும் போகலாம். இரண்டு திசையிலும் ஒவ்வொரு செலுத்தி வாங்கி (Trans ceivers)களும் வாங்கி வெளியிடும். பொதுவாக இரு திசை இணைப்புத் தொகுதிகள் பேருந்துகள் நிலை யிலோ அல்லது திறந்த கலெக்டர், டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டர் தருக்க முறையில் அமைந்திருக்கும் அளவை களாகவோ இருக்கும்.

bidirectional bus : இருதிசை மின் இணைப்புத் தொகுதி : ஒரே மின் இணைப்புப் பாதை இருதிசைகளி லும் தகவல் மாற்றப்படுதல்.

bidirectional printer : இருதிசை அச்சுப் பொறி : அச்சிடும் தலை திரும்பி வரு வதன் தாமதத்தைத் தவிர்க்க இடது புறத்திலிருந்து வலப்புறமாகவும், வலதுபுறத்திலிருந்து இடப்புறமாக வும் அச்சிடும் அச்சுப் பொறி.

biform : இரு வடிவம் : எழுத்து வடிவ இயலில், சிறிய எழுத்து மற்றும் சிறிய தலைப்பெழுத்துகளைச் சேர்த்து உருவாக்கும் சிறிய எழுத்து அகரவரிசை

bifurcation : இரண்டாகப் பிரித்தல்; இருகூறாக்கல் : இரண்டு, இரண்டாக மட்டும் வெளியீடு வருகின்ற சூழ் நிலை. 1 அல்லது 0, உண்மை அல்லது பொய், இயக்கு அல்லது நிறுத்து போன்றவை.